ஐஎன்எஸ் ராஜாளி | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
![]() | |||||||||||
சுருக்கமான விபரம் | |||||||||||
வானூர்தி நிலைய வகை | கடற்படை விமான நிலையம் | ||||||||||
இயக்குனர் | இந்தியக் கடற்படை | ||||||||||
அமைவிடம் | அரக்கோணம், தமிழ்நாடு, இந்தியா | ||||||||||
உயரம் AMSL | 265 ft / 81 m | ||||||||||
ஆள்கூறுகள் | 13°04′16″N 079°41′28″E / 13.07111°N 79.69111°E | ||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||
|
ஐஎன்எஸ் ராஜாளி அல்லது அரக்கோணம் கடற்படை விமான நிலையம் (ஐஏடிஏ: N/A, ஐசிஏஓ: VOAR) என அறியப்படும் இது இந்தியாவின் கடற்படை விமான நிலையம் ஆகும். இது தமிழ்நாட்டில் அரக்கோணம் அருகே அமைந்துள்ளது. மேலும் இது ஆசியாவிலேயே மிகவும் நீளமான இராணுவ ஓடுபாதையைக் கொண்டுள்ளது.[1]
இந்த விமானத்தளம் இரண்டாம் உலகப் போரில் நேச நாடுகளின் உபயோகத்திற்காக 1942ல் கட்டப்பட்டது. முதல் பதிவுசெய்யப்பட்ட செயல்பாடு, 1942ன் மே மற்றும் செப்டம்பருக்கு இடையில், ராயல் இந்திய விமானப்படையின் இரண்டாவது படைப்பரிவு பிரித்தானிய இந்திய இராணுவத்திற்கு உதவ வெஸ்ட்லேன்ட் லிசண்டர் எனும் விமானத்தில் பறந்ததே ஆகும்.