ஐட்யூன்ஸ் தொலைநிலை (iTunes Remote) என்பது ஐஓஎஸ் சாதனங்களுக்கு ஆப்பிள் நிறுவனம் உருவாக்கிய ஒரு மென்பொருளாகும். ஆப்பிள் தொலைக்காட்சி அல்லது ஐட்யூன்ஸ் நூலகத்திற்கு தொலைநிலை கட்டுப்பாட்டாக பயன்படுத்தலாம். தற்போது எல்லா ஐஓஎஸ் சாதனங்களில் ஆப் ஸ்டோரிலிருந்து இலவசமாக பதிவிறக்கலாம்.
ஜூலை 10, 2008 அன்று, ஆப் ஸ்டோரில் இப்பயன்பாட்டை வெளியிட்டார்கள்.[1] அதே நாள், ஆப்பிள் டி. வி. 2.1 மென்பொருள் புதுப்பித்தல் வெளியிடப்பட்டது. அதில் ஐபோன் மற்றும் ஐபாட் டச் தொலை கட்டுப்பாடு சாதனங்களாக அங்கீகாரம் சேர்க்கப்பட்டது.[2] பின்னர் பதிப்புகளில் ஐ-பேடு மற்றும் ஐட்யூன்ஸ் ஆதரவு சேர்க்கப்பட்டது.