பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
ஐதராக்சிலமீன் நைட்ரேட்டு
| |
இனங்காட்டிகள் | |
13465-08-2 | |
ChemSpider | 24259 |
EC number | 236-691-2 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 26045 |
| |
பண்புகள் | |
H4N2O4 | |
வாய்ப்பாட்டு எடை | 96.04 கி/மோல் |
அடர்த்தி | 1.84 கி/செமீ3 |
உருகுநிலை | 48 °செல்சியசு |
கரையும் | |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | External MSDS (18 % கரைசலாக) |
ஈயூ வகைப்பாடு | வெடிக்கும் பொருள் (E) Carc. Cat. 3 Toxic (T) Harmful (Xn) Irritant (Xi) Dangerous for the environment (N) |
R-சொற்றொடர்கள் | R2, R22, R24, R36/38, R40, R43, வார்ப்புரு:R48/22, R50 |
S-சொற்றொடர்கள் | (S1/2), S26, S36/37, S45, S61 |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | ஐதராக்சிலமோனியம் சல்பேட்டு ஐதராக்சிலமோனியம் குளோரைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | அமோனியம் நைட்ரேட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
ஐதராக்சிலமோனியம் நைட்ரேட்டு (Hydroxylammonium nitrate) அல்லது ஐதராக்சிலமீன் நைட்ரேட்டு (HAN) என்பது NH3OHNO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய ஒரு கனிமச் சேர்மம் ஆகும். இது ஐதராக்சிலமீன் மற்றும் நைட்ரிக் அமிலத்திலிருந்து பெறப்பட்ட உப்பு ஆகும். அதன் தூய வடிவத்தில், இது நிறமற்ற நீர் உறிஞ்சும் தன்மை கொண்ட ஒரு திண்மமாகும். இது ஏவூர்திகளில் எரிபொருளாகப் பயன்படுத்தப்படக்கூடிய சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது. ஒற்றை முற்செலுத்தியின் கரைசலாகவோ அல்லது இருமுனைப்பு முற்செலுத்திகளாகவோ இது பயன்படுத்தப்படலாம் [1] ஐதராக்சிலமோனியம் நைட்ரேட்டு (HAN) அடிப்படையிலான முற்செலுத்திகள் எதிர்கால பசுமை முற்செலுத்தி அடிப்படையிலான பணிகளுக்கு சாத்தியமான மற்றும் பயனுள்ள தீர்வாகும். ஏனெனில், இது வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் ஐதரசீனுடன் ஒப்பிடும்போது 50% அதிக செயல்திறனை வழங்குகிறது.
இந்தச் சேர்மமானது பிரிக்கப்பட்ட ஐதராக்சிலமோனியம் மற்றும் நைட்ரேட்டு அயனிகளைக் கொண்ட உப்பு ஆகும். ஐதராக்சிலமோனியம் நைட்ரேட்டு நிலையற்றது, ஏனெனில் இது ஒடுக்கியையும் (ஐதராக்சிலமோனியம் நேரயனி) மற்றும் ஒரு ஆக்சிசனேற்றி (நைட்ரேட்டு) இரண்டையும் கொண்டுள்ளது.[2] இந்த நிலையானது அம்மோனியம் நைட்ரேட்டுக்கு ஒத்ததாக இருக்கிறது. இது பொதுவாக நீர்க்கரைசலாக கையாளப்படுகிறது. இதன் கரைசல் அரிக்கும் தன்மையும், நச்சுத்தன்மையும் வாய்ந்தது, மேலும் இது புற்றுநோய் காரணியாகவும் இருக்கலாம். குறிப்பாக உலோக உப்புகளின் எச்சங்களின் முன்னிலையில் திண்ம ஐதராக்சிலமீன் நைட்ரேட்டு நிலையற்றது, .
ஆய்வக தயாரிப்பானது இரட்டை சிதைவு, நடுநிலையாக்கல், பிசின்கள் வழியாக அயனி பரிமாற்றம், மின்னாற்பகுப்பு, நைட்ரிக் அமிலத்தின் ஐதரசனேற்றம், நைட்ரிக் ஆக்சைடுகளின் வினையக்க குறைப்பு ஆகிய முறைகளை அடிப்படையாகக் கொண்டதாகும்.
திட மற்றும் திரவ வடிவத்தில் ஏவூர்தியின் முற்செலுத்தியின் ஒரு அங்கமாக ஐதராக்சிலமீன் நைட்ரேட்டின் பயன்பாடுகள் உள்ளன. ஐதராக்சிலமீன் நைட்ரேட்டு மற்றும் அம்மோனியம் டைநைட்ரமைடு, மற்றொரு ஆற்றல் அயனி கலவை, ஆகியவை ஐதரசீன் ஏவூர்தி ஒற்றை முற்செலுத்திகளுக்கு நச்சு குறைந்த மாற்றாக பரிசீலனையில் உள்ளது. ஏனெனில். ஐதரசீனுடன் ஒப்பிடுகையில், இந்தக் கரைசல் 20% அதிக குறிப்பிட்ட தூண்டுதலையும், 1.4 மடங்கு அதிக அடர்த்தியையும், குறைந்த உறைநிலை மற்றும் நச்சுத்தன்மையையும் கொண்டுள்ளது.[3] எச்ஏஎன் மற்றும் ஏடிஎன் ஆகியவை நீர்க் கரைசலிலோ அல்லது எரிபொருள் திரவங்களான கிளைசீன் அல்லது மெத்தனால் போன்றவற்றின் கரைசலிலோ ஒற்றை முற்செலுத்திகளாக செயல்படும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் மற்றும் தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா) ஆகியவை இதை வருங்காலத்தில் ஐதரசீனுக்கு மாற்றான ஏரிபொருளாக பயன்படுத்துவது குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன.
அணுசக்தி மறு செயலாக்கம் என்பது அணுக்கருப் பிளவு வினைகளின் விளைவாக கிடைத்த விளைபொருட்களை வேதியியல்ரீதியாக பிரித்தல் மற்றும் பயன்படுத்தப்பட்ட அணு எரிபொருளிலிருந்து பயன்படுத்தப்படாத யுரேனியத்தைப் பிரித்தெடுத்தல் ஆகிய செயல்களை உள்ளிட்டவையாகும்.இச்சேர்மம் சில நேரங்களில் புளூட்டோனியம் அயனிகளைக் குறைக்கும் ஒடுக்கியாக அணுசக்தி மறு செயலாக்கத்தில் பயன்படுத்தப்படுகிறது.
இந்த பொருள் வெடிக்கும் தன்மையுடையது. தோலுடன் தொடர்பு கொள்ளும் போது நச்சுத்தன்மை வாய்ந்தது. நீர்வாழ் உயிரினங்களுக்கு மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது. உட்கொண்டால் தீங்கு விளைவிக்கும். கண்ணில் பட்டால் கடுமையான கண் எரிச்சலை ஏற்படுத்துகிறது. புற்றுநோயை ஏற்படுத்தும் காரணியாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. நீண்ட கால அல்லது தொடர்ந்த வெளிப்பாடு மூலம் உறுப்புகளுக்கு சேதம் ஏற்படலாம். தோல் எரிச்சலை ஏற்படுத்துவதோடு ஒவ்வாமை தோல் அழற்சி ஏற்படலாம்.[4]