ஐதராபாதி ரூபாய்

ஐதராபாதி ரூபாய்
ஐதராபாத்து இராச்சியம் ரூ.10.
மதிப்பு
துணை அலகு
 1/16அணா
 1/192பய்
வங்கித்தாள்1, 5, 10, 100, 1000 ரூபாய்கள்
Coins1,2 பய், ½, 1, 2, 4, 8 அணாக்கள், 1 ரூபாய்
மக்கள்தொகையியல்
பயனர்(கள்)வார்ப்புரு:நாட்டுத் தகவல் ஐதராபாத்து இராச்சியம்

ஐதராபாத்து ரூபாய் 1918 முதல் 1959 வரை ஐதராபாத்து இராச்சியத்தில் புழங்கிய நாணயமாகும். 1950 முதல் இந்திய ரூபாயுடன் சேர்ந்து புழக்கத்தில் இருந்தது. இந்திய ரூபாய் போலவே 16 அணாக்கள் ஒரு ரூபாயாகவும் 12 பய்கள் ஒரு அணாவாகவும் இருந்தன. செப்பிலும் பின்னர் வெங்கலத்திலும் 1,2 பய் நாணயங்களும் ½ அணாவும் வெளியிடப்பட்டன; செப்பு-நிக்கல் (பின்னர் வெங்கலம்) மாழையில் 1 அணாவும் 2, 4, 8 அணா மற்றும் 1 ரூபாய் வெள்ளியிலும் வெளியிடப்பட்டன.[1][2][3]

1948இல் இந்திய ஒன்றியத்திலும் 1950இல் இந்தியாவிலும் இணைந்தபிறகும் தனது நாணயங்களை வெளியிட அனுமதிக்கப்பட்ட ஒரே இந்திய மன்னராட்சி ஐதராபாத்து இராச்சியமாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. RBI Currency Museum: Hyderabad State banknotes Reserve Bank of India. Retrieved 14 August 2021
  2. "10 Osmania Sicca". Mintage World (in ஆங்கிலம்). 6 August 2021.
  3. Rezwan Razack and Kishore Jhunjhunwalla (2012). The Revised Standard Reference Guide to Indian Paper Money. Coins & Currencies. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-89752-15-6.