ஐதராபாத்து கலீம் (ஆங்கிலம்: Hyderabadi haleem(உருது: حیدرآبادی حلیم; /ˈhaɪdərəbɑːdiːhəˈliːm/) என்பது இந்திய நகரமான ஐதராபாத்தில் பிரபலமான ஒரு உணவு வகையாகும்.[1][2] கலீம் என்பது இறைச்சி, பயறு , கோதுமை ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இது முதன் முதலில் ஒரு அரபு உணவாக இருந்தது. மேலும், நிசாம்களின் ஆட்சியில் ஐதராபாத்தில் சாயுஸ் மக்களால் அறிமுகப்படுத்தப்படது. (ஐதராபாத் மாநிலத்தின் முன்னாள் ஆட்சியாளர்கள்). உள்ளூர் பாரம்பரிய மசாலாப் பொருட்கள் ஒரு தனித்துவமான ஐதராபாத் கலீம் உருவாக உதவியது,[3] இது 19 ஆம் நூற்றாண்டில் பூர்வீக ஐதராபாத் மக்களிடையே பிரபலமானது.
கலீம் தயாரிப்பது ஐதராபாத் பிரியாணியுடன் ஒப்பிடப்பட்டுள்ளது. திருமணங்கள், கொண்டாட்டங்கள் மற்றும் பிற சமூக சந்தர்ப்பங்களில் இது பாரம்பரிய உணவு என்றாலும், இது குறிப்பாக இசுலாமிய மாதமான ரமலான் மாதத்தில் இப்தார் நோன்பு காலங்களில் உருவாக்கப்படுகிறது. (நாள் முழுவதும் இருக்கும் உண்ணாவிரதத்தை முடிக்கும் மாலை உணவு) இது உடனடி ஆற்றலை வழங்குகிறது. மேலும், கலோரி அதிகமாக உள்ளது. இது ரமலானுக்கு ஒத்ததாக அதன் கலாச்சார முக்கியத்துவத்தையும் பிரபலத்தையும் அங்கீகரிக்கும் வகையில் அமைந்துள்ளது. 2010 ஆம் ஆண்டில் இந்திய புவிசார் குறியீடு பதிவு அலுவலகத்தால் புவிசார் குறியீடு (ஜிஐஎஸ்) வழங்கப்பட்டது,[4] இந்த அந்தஸ்தைப் பெற்ற இந்தியாவின் முதல் அசைவ உணவாக இது திகழ்கிறது.
முதலில் ஒரு அரபு உணவாக கலீம் உருவானது[5][6] இறைச்சி மற்றும் கோதுமை ஆகிய இரண்டும் முக்கிய மூலப் பொருட்கள் ஆகும். ஆறாவது நிசாம், மஹபூப் அலி கான், ஆசாப் ஜா ஆட்சியின் போது அரபிலிருந்து புலம்பெயர்ந்தோரால் இது ஐதராபாத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் ஹைதராபாத் உணவு முறைஏழாம் நிசாம் மிர் உசுமான் அலிகான் ஆட்சியின் போது ஒரு ஒருங்கிணைந்ததாக மாறியது.[7][8] ஏழாவது நிசாமின் அரசவையின் பிரபுக்களில் ஒருவரான யேமனின் முகல்லா, (ஹத்ராமாத்) என்ற இடத்திலிருந்து வந்த அரபு தலைவரான சுல்தான் சயிப் நவாஸ் ஜங் பகதூர் இதை ஐதராபாத்தில் பிரபலப்படுத்தினார்.[5][9] அசல் செய்முறையில் உள்ளூர் சுவைகளை சேர்ப்பதன் விளைவாக மற்ற வகை கலீம்களிலிருந்து வேறுபட்ட சுவை கிடைத்தது.[10]
ஐதராபாத்தில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது
அதிகாரப்பூர்வமாக ஐதராபாத் கலீம் மதீனா உணவகம் 1956 இல் ஈரானிய விடுதி நிறுவனர் ஆகா உசைன் ஜாபெத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது.[11]
1947 ஆம் ஆண்டில் பதர்கட்டியில் உள்ள வக்ஃப் சொத்தில் திறக்கப்பட்ட மதீனா உணவகத்திலிருந்து ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு சேவை செய்ய பயன்படுத்தப்படுகிறது. ஐதராபாத்தில் உள்ள பழமையான உணவகங்களில் ஒன்று மதீனா உணவகவும் ஒன்றாகும்.[12] மதீனா உணவகம் புதுப்பிக்கப்பட்ட பின்னர், கடைசி நிசாம், மிர் ஒஸ்மான் அலிகான் 1956 இல் திறந்து வைத்தார்.[13]
பாரம்பரியமாக, ஐதராபாத் கலீம் ஒரு விறகு அடுப்பில் 12 மணிநேரம் வரை குறைந்த தீயில் சமைக்கப்படுகிறது (ஒரு செங்கல் மற்றும் மண் சூளை மூடப்பட்ட ஒரு அடுப்பு). ஒன்று அல்லது இரண்டு பேர் அதை மரக் கரண்டிகளால் தொடர்ந்து கிளற வேண்டும். வீட்டில் தயாரிக்கப்பட்ட ஐதராபாத் கலீமைப் பொறுத்தவரை, சிறிய மரக்கரண்டி துண்டு துண்டாக வெட்டப்பட்ட இறைச்சி ஒட்டும்-மென்மையான நிலைத்தன்மையை அடையும் வரை அதைக் கிளற பயன்படுத்தப்படுகிறது.
[14][15]