உருவாக்கம் | 2006 |
---|---|
வகை | அரசு சார்பற்ற அமைப்பு |
சேவைப் பகுதி | சிங்கப்பூர் |
முக்கிய நபர்கள் | சாக்குலைன் லோ |
வலைத்தளம் | www |
ஐதா (Aidha) என்பது சிங்கப்பூரில் உள்ள ஓர் அரசு சாரா அமைப்பாகும். வெளிநாட்டு வீட்டுத் தொழிலாளர்கள் மற்றும் குறைந்த வருமானம் உடைய பெண்களுக்கு நிதி கல்வியறிவு மற்றும் சுய-மேம்பாட்டு பயிற்சித் திட்டங்களை இவ்வமைப்பு வழங்குகிறது. மேலும் நிலையான செல்வத்தை உருவாக்குவதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மாற்றிக் கொள்ள அவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. [1] [2] [3] [4]
சிங்கப்பூரில் உள்ள ஒரே ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் ஐதா மட்டுமேயாகும். வீட்டுப் பணியாளர்களுக்கு தங்கள் பணத்தை எவ்வாறு நிர்வகிப்பது மற்றும் தொழில்களை எவ்வாறு தொடங்குவது என்று கற்பிப்பதில் நிபுணத்துவம் பெற்ற அமைப்பாக செயல்படுகிறது.
2001 ஆம் ஆண்டு சமூக ஆர்வலரான மெலிசா கிவீ மற்றும் எழுத்தாளர் ஆட்ரி சின் ஆகியோர் சிங்கப்பூரில் உள்ள வீட்டுத் தொழிலாளர்கள் தங்கள் வறுமை சுழற்சியில் இருந்து வெளியேற உதவுவதற்காக நிதி கல்வியறிவுத் திட்டத்தைத் தொடங்கினர். ஐ.நா. மகளிர் சிங்கப்பூர் என்ற அரசு சாரா அமைப்பு 2005 ஆம் ஆண்டில் மறுசீரமைப்பு காரணமாக நிறுத்தப்படும் வரை இந்த திட்டத்தை இயக்குவதில் ஈடுபட்டிருந்தது. திட்டத்தைத் தொடர சிங்கப்பூர் ஐ.நா. பெண்கள் அமைப்பின் சில உறுப்பினர்கள் 2006 ஆம் ஆண்டில் ஐதாவை அமைக்க முடிவு செய்தனர். [1]
ஐதா என்பது ஒரு சமசுகிருத சொல்லாகும். இதன் பொருள் "நாம் விரும்புவது" என்பதாகும்.
வீட்டுப் பணியாளர்கள் தங்கள் குடும்பங்களுக்கு ஒரு நிலையான வணிகத்தைத் தொடங்க தேவையான சேமிப்புப் பழக்கங்களையும் திறன்களையும் வளர்த்துக் கொள்ள பின்வரும் படிப்புகள் இவ்வமைப்பால் வழங்கப்படுகின்றன.