ஐந்தாம் சிவாஜி (Shivaji V)[1] (26 டிசம்பர் 1830 – 4 ஆகஸ்டு 1866), மராத்திய போன்சலே வம்சத்தின் கோல்ஹாப்பூர் சமஸ்தானத்தின் அரசர் ஆவார். சாகாஜிக்குப் பின்னர் இவர் கோல்ஹாப்பூர் இராச்சியத்தை 1838 முதல் 1866 முடிய ஆண்டார்.
பிரித்தானிய இந்தியா ஆட்சியின் கீழ் இவரது அரசு ஒரு சுதேச சமஸ்தானமாக இருந்தது. இவருக்குப் பின் இரண்டாம் இராஜாராம் கோலாப்பூர் இராச்சியத்தின் மன்னரானார்.