1855-இல் வரையப்பட்ட ஓவியம். ஐயங்கார் உடலில் நாமம் போட்டு கையில் நீர் கலம் வைத்திருக்கிறார். | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
---|---|
தமிழ்நாடு, கருநாடகம், ஆந்திர பிரதேசம் | |
மொழி(கள்) | |
தாய் மொழி: பிராமணத் தமிழ் | |
சமயங்கள் | |
இந்து சமயம் (வைணவம்) | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
பஞ்ச திராவிட பிராமணர்கள், தமிழ் மக்கள், ஐயர் |
ஐயங்கார் (அல்லது அய்யங்கார்) என்றழைக்கப்படுவோர் இராமானுஜரின் விசிஷ்டாத்வைதத் தத்துவத்தைக் கடைப்பிடிக்கும் பிராமணர்கள் ஆவர். இவர்கள் பெரும்பாலும் தமிழகம், கர்நாடகம் மற்றும் ஆந்திரத்திலும் காணப்படுகின்றனர்.
ஐயங்கரின் சொற்பிறப்பியல் தொடர்பாகவும் பல கருத்துக்கள் உள்ளன. இதில் அய்யா - கரு என்ற வார்த்தையிலிருந்து உருவானது. இது ஐய்யங்காருவாகவும், பின்னர் ஐய்யங்கராகவும் மாறியது. "அய்யா" என்ற சொல் ஆரிய என்ற சமசுகிருத வார்த்தையின் பிராகிருதம் பதிப்பாகும். இது சமசுகிருதத்தில் உன்னதமானது என்று பொருளாகும்.
மாற்று மொழிபெயர்ப்பான ஐய்யங்கார் என்ற வார்த்தையை முதன்முதலில் திருப்பதியைச் சேர்ந்த காந்தாதை இராமானுஜா அய்யங்கார் என்பவர் பொ.ஊ. 1450 இல் பயன்படுத்தினார் என்று இராபர்ட் லெஸ்டர் கூறுகிறார்.[1]
இவர்களில் முக்கியமாக இரண்டு பிரிவுகள் உள்ளன.