ஐயாம் தாரானே, 15

ஐயாம் தாரானே, 15
இயக்கம்ராசூல் சதார் அமெலி
நடிப்புதாரானே அலிடோச்டி
வெளியீடு2002 (2002)
ஓட்டம்100 நிமிடங்கள்
நாடுஈரான்
மொழிபாரசீகம்

ஐயாம் தாரானே, 15 (I'm Taraneh, 15) என்பது 2002 ஆம் ஆண்டு ராசூல் சதார் அமெலி (Rasul Sadr Ameli) இயக்கத்தில் பாரசீக மொழியில் வெளிவந்த ஈரானிய நாட்டு திரைப்படம் ஆகும். 75வது திரைப்படவிழாவில் சிறந்த வெளிநாட்டு மொழிப்படத்திற்காக நுழைந்த முதல் ஈரானிய திரைப்படம் ஆகும்.[1]

கதை

[தொகு]

தாய் இல்லாத, தன் தந்தை சிறை வாசம் அனுபவிக்கும் நிலையில் உள்ள இவர்களின் மகளான தாரானே என்பவளுக்கு தற்போது 15 வயதுதான் நடக்கிறது. இவளை ஒரு கம்பளி வியாபாரியான அமீர் என்பவன் மணமுடிக்கிறான். இருவருக்குமிடையில் எந்த பொருத்தமும் இல்லாததால் நான்கே மாதங்களில் பிரிந்துவிடுகின்றனர். அமீர் தொழில் செய்வதற்காக செர்மனிக்கு சென்றுவிடுகிறான். அத்தருவாயில் தான் கருவுற்றிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தாலும், தன் குழந்தையை பெற்றுவளர்க்க முடிவுசெய்கிறாள். அதன்பின் அவள் படும் துன்பங்கள்தான் மீதிக் கதை.

மேலும் பார்க்க

[தொகு]

வெளி இணைப்பு

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]