ஐரா | |
---|---|
சுவரொட்டி | |
இயக்கம் | சர்ஜூன் கே. எம் |
தயாரிப்பு | கோடாபட்டி கே ராஜேஷ் |
திரைக்கதை | பிரியங்கா ரவீந்திரன் |
இசை | சுந்தரமூர்த்தி கே. எஸ் |
நடிப்பு | நயன்தாரா கலையரசன் யோகி பாபு |
ஒளிப்பதிவு | சுந்தர்சன் சீனிவாசன் |
படத்தொகுப்பு | கார்த்திக் ஜோகேஷ் |
கலையகம் | கே. ஜே. ஆர் ஸ்டூடியோஸ் |
விநியோகம் | டிரென்ட் ஆர்ட்ஸ் & ஸ்டார் விஜய் (செயற்கைகோள் உரிமம்) |
வெளியீடு | மார்ச்சு 28, 2019 |
ஓட்டம் | 142 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஐரா (Airaa) என்பது 2019 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ் திகில் திரைப்படம் ஆகும். கே.எம். சர்ஜுன் எழுதி இயக்கியுள்ளார்.[1] இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கலையரசன், யோகிபாபு முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.[2] கோட்டாபாடி ஜே ராஜேஷின் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸின் தயாரிப்பில் 2018 ஆண்டில் கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் படப்பிடிப்பு பணிகள் திட்டமிட்டப்படி நடைப்பெறாததால் கால தாமதமானது. திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீஸர் 5 ஜனவரி 2019 அன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்பட்டது.[3][4] 2015 ஆம் ஆண்டு வெளிவந்த மாயா திரைப்படத்திற்கு பிறகு நயன்தாரா இரட்டை வேடங்கள் ஏற்றிருந்தார். ஐரா திரைப்படத்தின் டீஸர் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தாலும் படம் வசூலில் பின்னடைவை சந்தித்தது.[5]
பத்திரிகையாளராக யமுனா (நயன்தாரா) யூடியூபில் பேய் காணொளிகளை உருவாக்கி வெளியிடுவதில் ஆர்வமுடையவர். யமுனாவிற்கு திருமண ஏற்பாடுகள் நடைப்பெறுகின்றது. திருமணத்தில் விருப்பமில்லாமல் கிராமத்தில் இருக்கும் பார்வதி பாட்டி (குலப்புள்ளி லீலா) வீட்டிற்கு செல்கிறார். மற்றுமொரு காட்சியில் அமுதன் (கலையரசன்) நிகழும் தொடர் திடீர் மரணங்களை பற்றி விசாரித்து வருகிறார். அவர் தேடிச் செல்லும் இரு நபர்கள் மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்து போகிறார்கள். திடீர் மரணங்களுக்கு காரணம் பவானி என்று கருதும் அதிர்ச்சியடைகிறார். இரவில் வீட்டுக்கூரையில் ஏறி பவானி என்று கத்துகிறார். யமுனா, பார்வதி, மணி (யோகி பாபு), மணியின் மருமகன் பாப்லூ (அஸ்வந்த் அசோக்குமார்) ஆகியோர் தொடர்ந்து யூடியூபில் பேய் காணொளிகளை வெளியிடுகின்றனர். ஒரு நாள் யமுனாவும் அவரது பாட்டியும் பேயினால் தாக்கப்படுகிறார்கள். மறுநாள் மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் பார்வதி பாட்டி மரணமடைகிறார். பார்வதி பாட்டியின் மரணத்தின் பிறகு பப்லூ யமுனாவிடம் "பவானியக்கா நல்லவங்க" எனக் கூறி பேயுருவம் கொண்டு மறைந்து போகிறார். அவ்வளவு காலமும் மணியின் மருமகன் என்று எண்ணியிருந்த சிறுவன் பேய் என்பதை அறிகிறார். அமுதன் பவானியின் ஆவியோடு பேசுகிறார். பழிவாங்குவதை நிறுத்தும்படி வேண்டுகிறார். பவானியின் ஆவி யமுனாவை கொல்ல வேண்டும் என்கிறது. அமுதனும்ம யமுனாவும்ற்று சந்திக்கின்றனர். பவானியை பற்றி முழு விபரமும் அறிந்த அமுதனிடம் பவானி யார்? என்று வினவுகிறார். அமுதன் பவானியின் கதையை யமுனாவிடம் கூறுகிறார். பவானி யமுனாவை பழிவாங்கும் படலத்தில் இருந்து யமுனா எவ்வாறு மீளுவார் என்பதும், பவானியின் மரணத்தில் யமுனாவின் பங்கு என்ன என்பதுமே இந்த திரைப்படத்தின் மீதிக்கதை...
2018 ஆம் ஆண்டு வெளியான எச்சரிக்கை திரைப்படத்தை இயக்கிய இளம் இயக்குனர் கே.எம்.சர்ஜுன் ஐரா திரைப்படத்தை எழுதி இயக்கினார். பெண் கதாப்பாத்திரத்தை மையமாகக் கொண்டு நயன்தாராவின் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும்.[6] நயன்தாரா அறம் திரைப்படத்தை இயக்கிய கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இந்த படத்தையும் தயாரித்தது.[7] ஐரா நயன்தாராவின் 63வது திரைப்படமாகும். திரைப்படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வை சுவரிதழ் 8 அக்டோபர் 2018 அன்று வெளியிடப்பட்டது. சுந்தரமூர்த்தி கே. எஸ், சுதர்சன் சீனிவாசன் மற்றும் கார்த்திக் ஜோகேஷ் ஆகியோர் முறையே இசை இயக்குனர், ஒளிப்பதிவாளர் மற்றும் திரைப்பட ஆசிரியராக பணியாற்றியுள்ளார்கள். 2019 ஆம் ஆண்டு புதுவருட தினத்தையொட்டி திரைப்படத்தின் இரண்டாவது பார்வை சுவரிதழ் சமூக ஊடகங்கள் மூலம் வெளியிடப்பட்டது.[8]
ஐரா திரைப்படத்திற்கு சுந்தர்மூர்த்தி கே.எஸ் இசையமைத்துள்ளார். யுகபாரதி, பா. விஜய், தாமரை ஆகியோர் பாடல் வரிகளை எழுதியுள்ளனர்.