ஐலா கீட்டோ (Aila Inkeri Keto, பிறப்பு: மார்ச் 14, 1943) ஆத்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் மழைக்காடுகள் பாதுகாப்பு அமைப்பின் நிறுவனரும், அதன் தலைவரும் ஆவார். இவ்வமைப்பு இப்போது ஆத்திரேலிய மழைக்காடுகள் பாதுகாப்பு அமைப்பு என அழைக்கப்படுகிறது. இவர் ஆத்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பிறந்தவர்.[1] உயிர் வேதியியல் படிப்பை முடித்து குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தார்.[2] இவர் 1994, 2000, 2001 ஆம் ஆண்டுகளில் ஆத்திரேலியாவில் விருதுகள் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார்.[3] 2005 ஆம் ஆண்டு வால்வோ சுற்றுச்சூழலியல் விருது (Volvo Environment Prize) இவருக்கு வழங்கப்பட்டது.[4]