ஒன்பதுல குரு | |
---|---|
இயக்கம் | பி. டி. செல்வகுமார் |
தயாரிப்பு | எஸ். சிவகுமார் ஆர். சிவகுமார் |
கதை | பி. டி. சிவகுமார் |
இசை | கே |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | செல்லதுரை |
படத்தொகுப்பு | பி.சாய் சுரேஷ் |
கலையகம் | காஸ்மோ & போஸ் |
வெளியீடு | 8 மார்ச் 2013 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஒன்பதுல குரு(Onbadhule Guru) இது 2013இல் வெளிவந்த தமிழ் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இதை பி. டி. செல்வகுமார் எழுதி ,இயக்கியுள்ளார். படத்தில் வினய், சத்யன் (தமிழ் நடிகர்), பிரேம்ஜி அமரன், அரவிந்து ஆகாசு மற்றும் ராய் லட்சுமி (நடிகை) ஆகியோர் நடித்துள்ளனர்.[1] ஐந்து நண்பர்கள் ஒன்றாகச் சேர்ந்து மேற்கொள்ளும் பயணத்தின்போது அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதைப் பற்றி சொல்கிறது.[2][3] இந்த படத்தின் தலைப்பு சோதிடத்தில் பயன்படுத்தப்படும் ஒரு கணிப்பைக் குறிக்கிறது.
குருவிற்கு திருமணம் நடைபெறவுள்ள நாளில் அவன் காணாமல் போக அவனது நண்பன் பில்லாவை (வினய்) மணமகள் அழைப்பதில் படம் தொடங்குகிறது. வாழ்க்கையில் பல்வேறு சிக்கல்களை கொண்டிருக்கும் பில்லா (வினய்), ரங்கா சத்யன் (தமிழ் நடிகர்) ,கோச்சடையான்(அரவிந்து ஆகாசு) ஆகியோர் நண்பர்களாய் உள்ளனர். அவர்கள் தங்களது திருமணத்தை மறைத்து வாழ நினைக்கிறார்கள். இதில் குருவையும் சேர்த்துகொண்டு பெங்களூருவிலுள்ள சார்லஸ் (பிரேம்ஜி அமரன்), வீட்டிற்குச் செல்கிறார்கள். அங்கே நடக்கும் ஒரு விருந்தில் சஞ்சனா(ராய் லட்சுமி (நடிகை))வை அவள் யாரென்று அறியாமலேயே சந்த்தித்து அனைவரும் தனித்தனியே அவளை காதலிக்க முயல்கின்றனர். இதற்குப் பிறகு அவர்களுக்கு என்ன நடந்தது, சஞ்சனா யார்?, குருவிற்கு திருமணம் நடைபெற்றது பற்றிய கதை தொடர்கிறது.
நகுல், சிவா, சந்தானம் , பிரேம்ஜி அமரன் மற்றும் பிரியாமணி ஆகியோரைக் கொண்டு 2012இல் தொடங்கப்பட்ட இப்படம் , பின்னர், வினய், சத்யன் (தமிழ் நடிகர்), பிரேம்ஜி அமரன், அரவிந்து ஆகாசு மற்றும் ராய் லட்சுமி (நடிகை) ஆகியோரது நடிப்பில் பி. டி. செல்வகுமாரின் அறிமுக இயக்கத்தில் வெளிவந்தது.[4]
பொதுவாக எதிமறையான விமர்சங்களையே இப்படம் எதி கொண்டாலும் நல்ல வசூலை ஈட்டியதாக படக்குழு தெரிவித்தது.[3][5][6][7][8]
இசையமைப்பாளர் கே. இசையமைக்க, பாடலாசிரியர்கள் நா. முத்துக்குமார், மதன் கார்க்கி ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.[9]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help); Unknown parameter |=
ignored (help)