ஒருகிணைந்த நேபாளம் (unification of Nepal) கோர்க்கா இராச்சிய மன்னர் பிரிதிவி நாராயணன் ஷா ஆட்சிக் காலத்தில் சிதிறியிருந்த நேபாளத்தின் பகுதிகளை ஒன்றிணைத்து 1769-ஆம் ஆண்டில் ஒருங்கிணைந்த நேபாள இராச்சியத்தை நிறுவினார். காட்மாண்டுப் போர், கீர்த்திப்பூர் போர் மற்றும் பக்தபூர் போர்கள் மூலம், கோர்க்கா இராச்சிய மன்னர் பிரிதிவி நாராயணன் ஷா, காத்மாண்டு சமவெளிப் பகுதிகளில் இருந்த காட்மாண்டு, லலித்பூர் மற்றும் பக்தபூர் போன்ற 3 நகர இராச்சியங்களை வென்று கோர்க்கா இராச்சியத்துடன் இணைத்தார். பின்னர் மலைப்பகுதியில் இருந்த தலைநகரான கோர்க்காவை, மன்னர் பிரிதிவி நாராயாணன் ஷா, 1769-ஆம் ஆண்டில் காட்மாண்டு நகரத்திற்கு மாற்றினார்.[1][2]
மேற்கு நேபாளத்தின் 24 இராச்சியங்களை வென்ற மன்னர் பிரிதிவி நாராயணனின் ஷா வமத்தினர் கிழக்கே சத்லஜ் ஆறு முதல் மேற்கே சிக்கிம்-ஜல்பைகுரி வரை இமயமலைப் பகுதிகளில் நேபாள இராச்சியத்தை போர்கள் மூலம் விரிவுப்படுத்தினர்.[1][3]
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link) CS1 maint: numeric names: authors list (link)