சதுரங்கத்தில், ஒப்புதலின் பேரில் சமநிலை (draw by (mutual) agreement) என்பது இரு ஆட்டக்காரர்களும் ஆட்டத்தை சமநிலையாக்க சம்மத்திப்பதன் மூலம் ஆட்டம் முடிவுக்கு வருதலாகும்.[1] ஒரு ஆட்டக்காரர், எதிராளியிடம், ஆட்டத்தின் எந்த நிலையிலும் ஆட்டத்தை சமநிலையாக்க கேட்கும் போது எதிராளி சம்மதித்தால் அந்த ஆட்டம் சமநிலையில் முடிவடையும். இது சம்மந்தமாக பிபாவின் சதுரங்க விதிகளில், 9.1. எனும் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சதுரங்க வித்துவான்களின் ஆட்டங்களில் அதிகமாக, ஒப்புதலின் பேரில் சமநிலையே மற்ற வகையான சமநிலைகளை விட அதிகமாக ஏற்படுகின்றது. (இசுச்சில்லர் 2003, ப. 26–27).
{{citation}}
: Cite has empty unknown parameter: |3=
(help)