![]() 29 ஆகஸ்டு 2017 அன்று ஒய்னம் பெம்பெம் தேவிக்கு அருச்சுனா விருது விழங்கும் இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் | |||
சுய தகவல்கள் | |||
---|---|---|---|
பிறந்த நாள் | 4 ஏப்ரல் 1980 | ||
பிறந்த இடம் | இம்பால், மணிப்பூர், இந்தியா | ||
உயரம் | 5 அடி 2 அங் (1.57 m)[1] | ||
ஆடும் நிலை(கள்) | நடுக்கள வீரர் | ||
கழகத் தகவல்கள் | |||
தற்போதைய கழகம் | கிழக்கின் விளையாட்டுச் சங்கம் | ||
எண் | 6 | ||
முதுநிலை வாழ்வழி* | |||
ஆண்டுகள் | கழகம் | தோற். | (கோல்) |
2014–2015 | நியூ ரேடியண்ட் மகளிர் கால்பந்தாட்டச் சங்கம் | 3 | (6) |
2016–2018 | கிழக்கின் விளையாட்டுச் சங்கம் | 9 | (3) |
மொத்தம் | 12 | (9) | |
பன்னாட்டு வாழ்வழி‡ | |||
1995–2016 | இந்திய மகளிர் தேசிய கால்பந்தாட்ட அணி | 85 | (32) |
மேலாளர் வாழ்வழி | |||
2017 | கிழக்கின் விளையாட்டுச் சங்கம் | ||
2018– | 17 வயதிற்குட்பட்ட இந்திய மகளிர் கால்பந்தாட்ட தேசிய அணி (உதவியாளர்) | ||
2019– | மணிப்பூர் காவலதுறை விளையாட்டுச் சங்கம் | ||
2021– | மணிப்பூர் மகளிர் கால்பந்தாட்ட அணி | ||
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும் அன்று சேகரிக்கப்பட்டது. ‡ தேசிய அணிக்கான விளையாட்டுகளும் கோல்களும் 30 அக்டோபர் 2016 அன்று சேகரிக்கப்பட்டது. |
ஒய்னம் பெம்பெம் தேவி (Oinam Bembem Devi) (பிறப்பு: 4 ஏப்ரல் 1980), வடகிழக்கு இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தின் தலைநகரான இம்பால் நகரத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கால்பந்தாட்ட வீராங்கனை ஆவார்.[2]2017ஆம் ஆண்டில் ஒய்னம் பெம்பெம் தேவிக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் அருச்சுனா விருது வழங்கி கௌரவித்தார்.[3] இவரது செல்லப் பெயர் இந்திய கால்பந்தாட்டத்தின் துர்கை ஆகும். தற்போது இவர் இந்தியாவில் மகளிர் கால்பந்தாட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். [4]
2020ஆம் ஆண்டில் ஒய்னம் பெம்பெம் தேவிக்கு இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.[5][6]
1988ஆம் ஆண்டில் ஒய்னம் பெம்பெம் தேவி இம்பால் ஐக்கிய பயோனீர் விளையாட்டுச் சங்கத்தில் சேர்ந்து கால்பந்தாட்டம்|கால்பந்தாட்டப்]] பயிற்சி பெற்றார்.[1]1991ஆம் ஆண்டில் பெம்பெம் தேவி, 13 வயதிற்குட்பட்டோர் மகளிர் பிரிவு கால்பந்தாட்ட அணியில் விளையாடத் தேர்வு செய்யப்பட்டார். இக்கால்பந்தாட்டப் போட்டியில் பெம்பெம் தேவியின் சிறப்பான விளையாட்டை கண்டறிந்த ஒரு கால்பந்தாட்ட அணிக்கு இரண்டு ஆண்டு ஒப்பந்தத்தில் தேர்வு செய்யப்பட்டார். [7]
1993ஆம் ஆண்டு முதல் பெம்பெம் தேவி மணிப்பூர் மாநில மகளிர் கால்பந்தாட்ட அணியின் சார்பாக, இந்திய தேசிய அளவில் தொடர்ந்து விளையாடினார். ஐதராபாத் மாநகரத்தில் நடைபெற்ற 32வது இந்திய தேசிய விளயாட்டுகள் போது, பெம்பெம் தேவி மணிப்பூர் மகளிர் கால்பந்தாட்ட அணியின் தலைமை வீரராக செயல்பட்டு, வெற்றியைத் தேடித் தந்தார்.[7]
11 சூன் 2014 அன்று மாலத்தீவு காவல்துறை மகளிர் கால்பந்தாட்ட அணிக்கு எதிராக 4 கோல்கள் அடித்து மணிப்பூர் நியூ ரேடியண்ட் மகளிர் கால்பந்தாட்ட அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்தார். [7]21 சூன் 2014 அன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் 21 சூன் 2014 அன்று பெம்பெம் தேவி தலைமையில் மணிப்பூர் நியூ ரேடியண்ட் மகளிர் கால்பந்தாட்ட அணி, மாலத்தீவு நாட்டின் பாதுகாப்புப் படைகளின் மகளிர் அணியை 5க்கு 1 என்ற கோல்கள் கணக்கில் வென்று நியூ ரேடியண்ட் மகளிர் அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்தார்.[7]மாலத்தீவு கால்பந்தாட்ட கோப்பை போட்டியில் பெம்பெம் தேவி மூன்று ஆட்டங்களில் 6 கோல்களை அடித்தார். மேலும் இரண்டு கோல்கள் போட உதவினார். மேலும் இவரது சிறப்பான ஆட்ட முறையால் ஆட்ட நாயகியாக தேர்வானார்.[7]
ஒய்னம் பெம்பெம் தேவி தனது 15வது வயதில் பன்னாட்டு மகளிர் கால்பந்தாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டார். ஆசியான் விளையாட்டுப் போட்டிகளில், குவாம் மகளிர் கால்ப்ந்தாட்ட அணிக்கு எதிரான போட்டியில் பெம்பெம் தேவி கலந்து கொண்டார்.
1996ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய மகளிர் கால்பந்தாட்ட அணியில் இடம் பெற்ற பெம்பெம் தேவி, முதல் சுற்றில் ஜப்பான் மற்றும் நேபாளம் மகளிர் அணிகளை எதிர்த்து விளையாடினார். ஜப்பானிடம் தோற்ற இந்திய மகளிர் அணி, நேபாளை மகளிர் அணியை வென்றது. இரண்டாவது சுற்றில் உஸ்பெகிஸ்தான், துருக்மேனிஸ்தான் மற்றும் வட கொரியா அணிகளுடன் விளையாடி போட்டிகளில் வெற்றி பெற்றதால், பெம்பெம் தேவியின் பெயர் தேசிய அளவில் பிரபலமடைந்தது.[7]
1997 ஆசிய கால்பந்துக் கூட்டமைப்புக் கோப்பை போட்டிக்கு முன்னர், இந்திய மகளிர் கால்பந்தாட்ட அணி ஒரு மாதப் பயிற்சி முகாமிற்காக ஜெர்மனிக்கு சென்றது. அதில் பெம்பெம் தேவியும் ஒருவராக கலந்து கொண்டார். ஜெர்மன் பயிற்சி முகாமில் இந்திய மகளிர் அணி ஆங்காங் மற்றும் ஜப்பான் மகளிர் கால்ப்ந்தாட்ட அணிகளை தோற்கடித்தது. மேலும் இறுதிப்போட்டியில் குவாம் அணியை இந்திய மகளிர் அணி 10-0 கோல்கள் கணக்கில் தோற்கடித்தது.[7]2003ஆம் ஆண்டில் தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய கால்பந்துக் கூட்டமைப்புக் கோப்பை போட்டியில் பெம்பெம் தேவி விளையாடினார். 2010ஆம் ஆண்டில் வங்காளதேசத்தில் நடைபெற்ற 11வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் ஒய்னம் பெம்பெம் தேவி, இந்திய கால்பாந்தாட்ட மகளிர் அணிக்கு தலைவியாக (கேப்டன்) ஆடி வெற்றி வாகை சூடினார். மேலும் 2012ஆம் ஆண்டில் இலங்கையில் நடைபெற்ற தெற்காசிய கால்பந்துக் கூட்டமைப்பு நடத்திய போட்டிகளில், இந்தியா மகளிர் கால்பந்தாட்ட அணிக்கு தலைமை தாங்கிய பெம்பெம் தேவி இந்திய மகளிர் அணிக்கு வெற்றித் தேடிக்கொடுத்தார்.[7]
இவர் இறுதியாக சில்லாங்கில் நடைபெற்ற 12வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில், இந்திய மகளிர் கால்பந்தாட்ட அணியில் பெம்பெம் தேவி விளையாடினார்.[8]
ஆடிய விளையாட்டுக்களும், அடித்த கோல்களும் | ||
---|---|---|
ஆண்டு | விளையாட்டுக்கள் | கோல்கள் |
1995–2007 | ||
2010 | 10 | 4 |
2011 | 6 | 1 |
2012 | 5 | 5 |
2013 | 3 | 0 |
2014 | 2 | 2 |
2015 | 2 | 0 |
2016 | 5 | 0 |
மொத்தம் | 33 | 12 |
2018ஆம் ஆண்டில் பெம்பெம் தேவி 17 வயதிற்குட்பட்ட இந்திய மகளிர் கால்பந்தாட்ட அணியின் உதவி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். [9] 2018-19இல் இந்திய மகளிர் கால்பந்தாட்டப் போட்டிகளில் பெம்பெம் தேவி மணிப்பூர் காவல்துறை விளையாட்டுச் சங்கத்தின் மேலாளராக பதவி வகித்தார்.