ஒரு கல் ஒரு கண்ணாடி | |
---|---|
![]() | |
இயக்கம் | ராஜேஷ் |
தயாரிப்பு |
|
கதை | ராஜேஷ் |
இசை | ஹாரிஸ் ஜெயராஜ் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | கே. பாலசுப்பிரமணியம் |
படத்தொகுப்பு | விவேக் ஹர்ஷன் |
கலையகம் | ரெட் ஜயண்ட் மூவீஸ் |
வெளியீடு | ஏப்ரல் 13, 2012 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஒரு கல் ஒரு கண்ணாடி, (Oru Kal Oru Kannadi) உதயநிதி ஸ்டாலின் நடிக்க ராஜேஷ் இயக்கத்தில் வெளிவந்த தமிழ் காதல் - நகைச்சுவைத் திரைப்படம்.[1] இத்திரைப்படத்தில் தயாரிப்பாளர், உதயநிதி ஸ்டாலின், கதாநாயகனாக அறிமுகமானார். இவருடன், நகைச்சுவை நடிகர், சந்தானம் மற்றும், ஹன்சிகா மோத்வானி நடித்துள்ளார்.[2] ராஜேஷின் முதல் திரைப்படம் சிவா மனசுல சக்தி, பாடல் வரிகளைக் கொண்டு, இத்திரைப்படத்திற்கு பெயரிட்டுள்ளனர்.
சரவணன் (உதயநிதி) தனது முன்னாள் காதலி மீரா(ஹன்சிகா)வின் திருமண அழைப்பிதழைப் பெறுவதோடு கதை ஆரம்பிக்கிறது. இந்த திருமணத்தை நிறுத்துவதற்காக தன் நெருங்கிய நண்பனான பார்த்தசாரதி என்கிற பார்தாவுடன் ஒரு காரில் புறப்பட்டு பாண்டிச்சேரி செல்கின்றார். இந்த பயணத்தின் போது முன்கதை தொடங்குகிறது. சராசரி இளைஞரான சரவணன் அவருடைய நண்பர் பார்த்த சாரதியுடன் ஒரு திரையரங்கத்தில் வேலை செய்கிறார். ஒரு நாள் சாலையில் செல்லும்போது மீராவை பார்த்து காதலிக்கத்தொடங்கும் சரவணன் அவருடைய நண்பர் பார்த்தாவின் உதவியுடன் நிறைய கலகலப்பான பிரச்சனைகளை கடந்து எப்படி காதலியை கரம்பிடிக்கிறார் என்பதை நிறைய நகைச்சுவையுடன் சொல்கிறது படத்தின் திரைக்கதை.
சிறப்புத் தோற்றம் (அகர வரிசையில்):
ஓரி கல் ஒரு கண்ணாடி | ||||
---|---|---|---|---|
பாடல்கள்
| ||||
வெளியீடு | 5 மார்ச் 2012 | |||
இசைப் பாணி | திரைப்பட பாடல்கள் | |||
மொழி | தமிழ் | |||
இசைத்தட்டு நிறுவனம் | சோனி மியூசிக் | |||
இசைத் தயாரிப்பாளர் | ஹாரிஸ் ஜெயராஜ் | |||
ஹாரிஸ் ஜெயராஜ் காலவரிசை | ||||
|
மொத்தம் ஐந்து பாடல்கள் இடம் பெற்றிருந்தது,[3] ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருந்தார்.[4] பாடல்கள் சிங்கப்பூர் மற்றும் ஊட்டி ஆகிய இடங்களில் உருவாக்கப்பட்டது.[5][6] பாடல் வெளியீடு சத்யம் சினீமாஸில் மார்ச் 5 2012 அன்று நடைபெற்றது. நடிகர் கார்த்தி, சூர்யா, ஜீவா, ஆர்யா ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.[7][8] மூன்று நிமிட பட முன்னோட்ட காட்சியும், பாடல்களின் சில முன்னோட்ட காட்சியும் வெளியிடப்பட்டது.[9]
பாடல் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "காதல் ஒரு" | ஆளாப் ராஜு, ஹேமசந்திரன் & சுனிதா சராதே | 6:07 | |||||||
2. | "அழகே அழகே" | முகேஷ் & மதுமிதா | 5:55 | |||||||
3. | "அகிலா அகிலா" | ஆளாப் ராஜு, சின்மயி & ஷர்மிளா | 4:44 | |||||||
4. | "அடடா ஒரு" | கார்த்திக் | 3:46 | |||||||
5. | "வேணாம் மச்சான்" | நரேஷ் ஐயர் & வேல்முருகன் | 5:14 | |||||||
மொத்த நீளம்: |
24.64 |
இத்திரைபட பாடல்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது .Behindwoods.com," நிச்சயமாக இப்பாடல்கள் ரசிகர்களை மகிழ்விக்கும்!, " என்று பாடல்களுக்கு 3/5 மதிப்பெண் அளித்துள்ளது.[10] நிறைய இணையதளங்கள் "வேணாம் மச்சான்" மற்றும் " காதல் ஒரு பட்டர்பிளை" பாடல்களை முணுமுணுக்கும் படியாக உள்ளன என்று புகழ்ந்துள்ளன.[11]
பத்திரிக்கை விமர்சனங்கள் | |
---|---|
விமர்சன மதிப்பீடு | |
பத்திரிக்கை | மதிப்பெண் |
தி டைம்ஸ் ஆப் இந்தியா | ![]() ![]() ![]() ![]() ![]() |
ஆனந்தவிகடன் | வார்ப்புரு:42 |
பிஹைண்ட்ஹூட் | ![]() ![]() ![]() ![]() ![]() |
ரெடிப்ஃப் | ![]() ![]() ![]() ![]() ![]() |
இப்படம் பலரால் பாராட்டப்பட்டது, விமர்சனங்கள் பொதுவாக பாராட்டி அமைந்தது. இந்தியாஒன்.காம் சந்தானத்தின் நகைசுவையும் அறிமுக நாயகன் உதயநிதி ஸ்டாலினின் நடிப்பை பாராட்டி,
"ஹீரோ என்ற வகையில், இன்றைய அலட்டல் பார்ட்டிகளுக்கு உதயநிதி ஸ்டாலின் 200 மடங்கு பெட்டர்!" எனவும் மொத்ததில்,
"வித்தியாசம், பரீட்சார்த்தம் என்ற பெயரில் எங்கும் முகம் சுளிக்காமல், சுவாரஸ்யம் குறையாமல் பார்க்கும்படியாக ஒரு படத்தைக் கொடுத்த இயக்குநர் ராஜேஷ் ஹாட்ரிக் அடித்திருக்கிறார்.
ஒருமுறை என்ன... ஒன்ஸ்மோர் பார்க்கலாம்!" என்று குறிப்பித்துள்ளது.[12]
தமிழ்சினிமா.காம்,
"உதயநிதி ஒண்ணாம் நம்பர் ஹீரோ என்றால், பக்கத்தில் விழுகிற ஒவ்வொரு சைபரும் அதன் மதிப்பும் சந்தானமன்றி வேறில்லை. இவர் வாயிருக்கிற இடத்தில் வாஸ்து பகவானின் லெக்சுரி பிளாட்டும் இருக்கிறது போலும். அதை திறக்கும்போதெல்லாம் வெடித்து சிதறுகிறது தியேட்டர்." என்று கூறிருந்தது.
[13]
{{cite web}}
: CS1 maint: numeric names: authors list (link)