![]() முதல் பதிப்பின் அட்டைப்படம் (1934) | |
நூலாசிரியர் | ஏவலின் வாக் |
---|---|
நாடு | ஐக்கிய இராச்சியம் |
மொழி | ஆங்கிலம் |
வகை | கற்பனை |
வெளியீட்டாளர் |
|
வெளியிடப்பட்ட நாள் |
|
ஒரு கைப்பிடித் தூசி (A Handful of Dust) என்ற ஆங்கிலப் புதினம் பிரித்தானிய எழுத்தாளர் ஏவலின் வாக் (Evelyn Waugh) என்பவரால் எழுதப்பட்டது. இதன் முதல் பதிப்பு 1936 ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்தப் புதின ஆசிரியரின் ஆரம்பகாலப் புதினங்களில், நையாண்டி அதாவது நகைச்சுவை உணர்வுகள் மிகுந்த ஒன்றாக இப்புதினம் பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்தப் புதினங்கள் இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய காலங்களில் மிகப் பிரபலமாக இருந்தது. இருப்பினும் இந்தப் புதினத்தில் மறைந்திருந்த தீவிரமான கருத்துக்களால் பல விமர்சகர்கள் ஈர்க்கப்பட்டனர். மேலும் இது கத்தோலிக்கப் போருக்குப் பிந்தைய கால கட்டத்தில் வாக்கின் கற்பனை கலந்து உருவான கதை என்றும் கூறப்படுகிறது.
ஆரம்பத்தில் இப்புதினம், விமர்சகரிடத்தில் எளிமையான வரவேற்பை மட்டும் பெற்றது. ஆனால் பொது மக்களிடத்தில் பிரபலமடைந்திருந்து. அதனால் எப்போதும் புத்தகம் பதிப்பில் இருந்துகொண்டிருந்தது. அடுத்து வந்த ஆண்டுகளில் வாசகர்மட்டத்தில் மிகப் பெரும் வளர்ச்சி பெற்றிருந்தது. இது வாக்கின் மிகச்சிறந்த படைப்புகளுள் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. மேலும் 20 ஆம் நூற்றாண்டிற்கான அதிகாரபூர்வமற்ற பட்டியலில் சிறந்த புத்தகங்களில் ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளது.
டோனி லாஸ்ட் ஒரு கிராமத்து மனிதர். அவர் திருமணமானவர். அவரின் மனைவி பிராண்டா மற்றும் எட்டு வயது மகன் ஜான் ஆண்ட்ரூ ஆகியோருடன் தனது மூதாதையர் வாழ்ந்து மறைந்த ஹெட்டன் அபே என்ற பெயர் கொண்ட வீட்டில் வசித்து வந்தார். ஆனால் இந்த வீட்டில் வாழ்வதை பிராண்டா விரும்பவில்லை. மேலும் அந்த பழைய வீட்டை அசிங்கம் என்றழைத்தார். ஆனால் டோனிக்கோ இங்கு வசிப்பது பெருமையாகவும் மகிழ்ச்சி நிறைந்ததாகவும் இருந்தது.
டோனி கிராமத்து வாழ்க்கையில் ஒன்றிப்போயிருந்தார். அதனால் நாட்கள் நகர நகர அவரது மனைவி பிராண்டா மற்றும் மகனிற்கு அந்த கிராமத்து வாழ்க்கையின் மீது ஒரு சகிப்பின்மையும் வெறுப்பும் அதிகரித்திருப்பது அறியாமல் இருந்தார். அப்போது பிராண்டா, ஜான் பீவர் என்பவரை சந்திக்கிறார். அவர் மந்தமாகவும் அந்தளவுக்கு சிறப்பானவராகவும் இருப்பதாக தெரியவில்லை ஆனாலும் பிராண்டா பீவரிடம் ஒரு மறைமுகத் தொடர்பை உருவாக்கிக் கொண்டார். ஒரு கட்டத்தில் டோனியுடனான கிராம வாழ்க்கை மீதான் வெறுப்பின் தீவிரம் அதிகமானபோது பிராண்டா, பீவருடன் லண்டன் நகரத்தில் ஒரு வாடகை வீட்டில் வசிக்கத் தொடங்கினார். மேலும் லண்டன் வீட்டிற்கான வாடகையை டோனியை ஏற்றுக்கொள்ளச் செய்தார். ஒன்றுமறியா டோனி தனது மனைவியின் விருப்பத்தின் படி அந்த வீட்டிற்கு வாடகை கொடுக்க ஒப்புகொண்டார். அந்த வாடகை வீடு பீவரின் தாயாருடையது. பீவரின் தாய் நேர்மையற்ற முறையில் தொழில் புரிபவராக இருந்தார். ஆனால் லண்டனில் இருந்தவர்களுக்கு பிராண்டா மற்றும் பீவர் தொடர்பை அறிந்திருந்தார்கள். பிராண்டா, டோனியை விவாகரத்து செய்ய எவ்வளவோ முயன்றும் வெற்றி பெறவில்லை.
ஜான் ஆண்ட்ரு ஒரு விபத்தில் இறந்தபோது பிராண்டா இலண்டனில் தான் இருந்தார். ஜான் இறந்த செய்தி கேட்ட உடன் முதலில் பீவர் இறந்து விட்டதாக பிராண்டா நினைத்தார் ஆனால் இறந்தது தனது மகன் ஜான் என்பதை அறிந்த பின் தனது உண்மையான உணர்ச்சிகளை வெளிபடுத்தாமல் மனதிற்குள் "மிக்க நன்றி கடவுளே" என்று பிராத்தித்துக் கொண்டார். இறுதிச் சடங்கிற்குப் பிறகு பிராண்டா, டோனியிடம் தனக்கு விவகாரத்து வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அப்பாவியான டோனி, பிராண்டாவின் சூழ்ச்சிகளை அறிந்து அதிர்ச்சிக்குள்ளானார். பின்னர் விவாகரத்து செய்யவும் மற்றும் ஆண்டிற்கு £500 வழங்கவும் ஒப்புக்கொண்டார். மேலும் விவாகரத்து செய்ய சாட்சியாக டோனி, பிரைடானில் ஒரு விளைமாதரிடம் ஒரு வார காலத்திற்கு தங்கினார். பின் டோனி, பிராண்டாவின் சகோதரர் மூலம் பிராண்டா, பீவரின் உந்துதளின் பேரில் ஆண்டிற்கு £2,000 வேண்டும் என்று கேட்பதாக அறிந்து கொண்டார். இதற்காக டோனி ஹெட்டனை விற்க வேண்டி வந்தது. மேலும் டோனியின் கனவுகள் சுக்குநூறானது. எனினும், விளைமாதர் தனது குழந்தையை அழைத்துக் கொண்டு வந்து தன்னிடம் டோனி எந்த வித உறவிலும் ஈடுபடவில்லை என்று சாட்சியம் சொன்னார். இதனையடுத்து டோனி, விவாகரத்துப் பேச்சுவார்த்தைகளில் இருந்து விலகி, ஆறு மாதங்களுக்கு பயணிக்க விரும்புவதாக அறிவித்தார். அவர் திரும்பியவுடன், பிரெண்டா தனது விவாகரத்துப் பெறாலம் என்றார், ஆனால் எந்தவொரு நிதியும் தரப்போவதில்லை என்றும் அவர் கூறுனார்.
டோனியிடமிருந்து எதிர்பார்த்த பணம் வராததால், பீவர், பிராண்டா மீதிருந்த ஆர்வத்தை விட்டுவிட்டார். ஏனெனில் அவர் வறுமையில் தள்ளப்பட்டு தவித்துக்கொண்டிருந்தார். இதற்கிடையில், டோனி ஒரு ஆராய்ச்சியாளரான டாக்டர் மெசிங்கர்ரை சந்தித்தார். அமேசான் மழைக்காடுகளில் தொலைந்து போன நகரத்தை தேடுவதற்கான அவரது பயணத்தில் டோனியும் இணைந்தார். டோனி, தனது கப்பல் பயணத்தின் போது தெரசா டி விட்ரே என்பவரை சந்தித்து காதல் வயப்படுகிறார். அந்தப் பெண் ரோமன் கத்தோலிக்கர் என்று தெரிந்த பின் தான் ஒருவரை திருமணம் செய்தது மற்றும் தற்போது விவகாரத்து பெற காத்திருப்பதை கூறி அவரிடமிருந்து விலகினார். பிரேசிலில், மெசிங்கர் திறமையற்ற அமைப்பாளர் என்பதை நிரூபிக்கிறார்; இதனால் அவரது சொந்த வழிகாட்டிகளை கட்டுப்படுத்த இயலாமல் போனது, வழிகாட்டிகள், அவரையும் மற்றும் டோனியையும் காட்டில் ஆழத்தில் கைவிட்டுவிடுகின்றனர். டோனி நோய்வாய்படுகிறார். மெசிங்கர், தன்னிடமிருந்து ஒரு படகில் உதவி கேட்பதற்காக போகிறார். அப்படி போகையில் வழிதவறி நீர்வீழ்ச்சி இருக்கும் பகுதிக்குள் இழுத்துச் செல்லப்பட்டு இறந்து போகிறார்.
டோனி பிரம்மை பிடித்தவராய் காட்டில் அலைந்து கொண்டிருந்தார். அப்போது டோடு என்பவர் டோனியை காப்பாற்றுகிறார். மெதுவாக டோனி, தனது ஆராக்கியத்தை பெறுகிறார். இந்த டோடு, காட்டில் இருக்கும் ஒரு பழங்குடி இன மக்களை ஆட்சி செய்கிறார். டோடு படிப்பறிவு இல்லாதிருந்தாலும் சார்லஸ் டிக்கின்சின் புத்தகங்களை வைத்திருந்தார். அந்த புத்தகங்களை தனக்கு வாசித்து பொருள் விளக்கம் தருமாறு டோனியிடம் கட்டளையிடுகிறார். இந்த வாசிப்பு தொடர்ந்து கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் டோனி, தனது விருப்பத்திற்கு மாறாக தான் இந்தக் காட்டில் இருப்பதாக உணர்ந்தார். டோனியை காப்பாற்றுவதற்காக ஒரு குழு அங்கு வருகிறது. இதனை அறிந்த டோடு, டோனியை போதை மருந்து கொடுத்து மயக்கி, மறைத்து வைக்கிறார். டோனியை தேடி வரும் குழுவிடம், டோனியின் கை கடிகாரத்தை கொடுத்து, டோனி இறந்து விட்டதாக சொல்கிறார். டோனி தான் காப்பாற்ற படுவதற்கான நம்பிக்கையை இழக்கிறார். இதன் மூலம், டோனி இனி எப்போதும் சார்லஸ் டிக்கின்ஸ் புத்தகங்களை டோடுக்காக வாசிப்பது நிரந்தரமாகிறது. இலண்டனில் டோனியின் மரணச் செய்தி ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஹெட்டன் அவரது உறவினர்களின் வசம் செல்கிறது, டோனியின் நினைவாக, ஒரு நினைவுச்சின்னத்தை ஹெட்டனில் நிறுவுகின்றனர், அதே நேரத்தில் பிரண்டா, டோனி நண்பன் ஜாக் கிரான்ட்-மென்ஸிஸை மணக்கிறார்.
1903 ஆம் ஆண்டு ஆர்தர் வாக்கின் இளைய மகனாக ஏவலின் வாக் பிறந்தார். அவரின் தந்தை லண்டனில் உள்ள சாப்மேன் & ஹால் என்ற புத்தகப் பதிப்பகத்தின் நிர்வாக இயக்குநராக இருந்தார். ஆக்ஸ்போர்டில் உள்ள லேன்சிங் கல்லூரி மற்றும் ஹெர்ட்ஃபோர்ட் கல்லூரியில் படிப்பை முடித்த பின் எழுத்தாளர் ஆவதற்கு முன் வாக் மூன்றாண்டுகள் தனியார் ஆயத்த பள்ளிகளில் கற்பிக்கும் ஆசிரியர் பணியில் இருந்தார்.[1] அதன் பின் 1926 ஆம் ஆண்டில் வாக்கின் சிறுகதையான சமநிலை (The Balance), முதன்முதலாக வணிக ரீதியில் சாப்மேன் & ஹால் பதிப்பகத்தால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்ட அவரது முதல் படைப்பாகும்.[2] இதன் பின் சிறிது காலம் டெய்லி எக்ஸ்பிரஸ் (Daily Express) நாளிதழில் செய்தியாளராகப் பணிபுரிந்தார்.[3]