ஒரு பெண்ணின் இதயம்

ஒரு பெண்ணின் இதயம்
The Heart of a Woman
முதல் பதிப்பின் அட்டை
நூலாசிரியர்மாயா ஏஞ்சலோ
நாடுஅமெரிக்கா l
வகைசுயசரிதை
வெளியீட்டாளர்ரேண்டம் ஹவுஶ்
வெளியிடப்பட்ட நாள்
1981
ஊடக வகைஅச்சிடப்பட்டது
பக்கங்கள்336 pp (hardcover 1st edition)
ISBN978-0-8129-8032-5 (hardcover 1st edition)
முன்னைய நூல்Singin' and Swingin' and Gettin' Merry Like Christmas
அடுத்த நூல்All God's Children Need Traveling Shoes

ஒரு பெண்ணின் இதயம் (The Heart of a Woman, தி ஹார்ட் ஒஃப் ஏ வுமன்) என்பது மாயா ஏஞ்சலோ என்ற அமெரிக்கப் பெண் எழுத்தாளரின் சுயசரிதைப் புத்தகம். இந்நூல் 1981 ஆம் ஆண்டு வெளிவந்தது. மாயா எழுதிய ஏழு சுயசரிதை தொகுப்புகளில் இந்தப் புத்தகம் நான்காவது புத்தகமாக வெளியிடப்பட்டது. 1957 ஆம் ஆண்டு முதல் 1962 ஆம் ஆண்டு வரையில் மாயா அவர்களின் வாழ்வில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களின் தொகுப்பு தான் ஒரு பெண்ணின் இதயம். இதில் அந்த கால கட்டத்தில் தான் பிரயாணம் செயத நாடுகள், நகரங்கள் அதாவது கலிபோர்னியா, நியுயார்க் நகரம், கெய்ரோ மற்றும் சீனா ஆகியவை பற்றியும், தனது பதின்பருவ வயதுடைய மகனின் வளர்ப்புப் பற்றியும், குடிசார் ஊரிமைக்கான இயக்கத்தில் தனது பங்களிப்பைப் பற்றியும் மற்றும் அந்தச் சமயத்தில் தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல் எதிர்பாளர்களில் ஒருவரின் மேல் தான் கொண்ட காதலைப் பற்றியும் இந்தத் தொகுப்பில் எழுதியுள்ளார். ஆனால் இந்தப் புத்தகத்தின் மையக்கரு என்றால் அது தாய்மைப் பற்றிய கருத்துக்கள் தான் ஏனெனில் பெரும்பான்மையாக தனது மகனின் வளர்ப்பைப் பற்றியே எழுதியிருப்பார். இந்தத் தொகுப்பில் தனது மகன் கல்லூரியில் சேர்வதாகவும் மேலும் தான் ஒரு புதிய சுதந்திரத்தை முன்னோக்கிக் கொண்டருப்பதாகவும் முடித்திருப்பார்.

இந்தப் புத்தகம் ஓப்ரா வின்ஃப்ரே அவர்கள் 1997 [1] ஆம் ஆண்டில் தேர்வு செய்த புத்தகப் பட்டியலில் இடம்பெற்றிருந்தது. பெரும்பான்மையான விமர்ச்சகர்கள் மாயாவின் முதல் புத்தகமான கூண்டுப்பறவை பாடுவது ஏன் என்பது எனக்குத் தெரியும் என்பதான் சிறந்தப் புத்தகம் என்கின்றனர்.

மேரி ஜான் லூப்டன் என்ற விமர்சகர் மாயாவின் எழுத்துக்களைப் பற்றி இப்படிச் சொன்னார்"அமெரிக்கச் சுயசரிதைகளில் மீறமுடியாத ஒரு கதை அமைப்பு"[2] என்றார். ஆப்பிரிக்க அமெரிக்க இலக்கியவாதியும் விமர்சகரும் மான லைமேன் பி. ஹேஜன் என்பவர் மாயாவின் எழுத்தைப் பற்றி இவ்வாறு "உயிர்வாழ்பவரின் ஒரு விசுவாசமான சுயசரிதை, சுய உண்ர்வு மற்றும் தொடர்ச்சியான கற்றல்" கூறுகிறார். ஒரு பெண்ணின் கதை சுயசரிதையின் மைய மாந்தரை முழு ஆளுமை நிலைக்கு உயர்த்துகிறது.[3] இந்தப் புத்தகம் மாயா ஏஞ்சலோவை பின்தொடர்ந்து அவர் பயணம் செய்த நாடுகளான அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா அவரோடு சேர்ந்துப் பயணிக்கிறது ஆனால் அவர் முக்கியமாக இதை குறிப்பிடுகிறார் "தனது சுய வாழ்க்கை மற்றும் உணர்வுகுளுக்கான பயணம்" என்று விவறிக்கிறார்.[4]

பின்னணி

[தொகு]

ஒரு பெண்ணின் இதயம் 1981 ஆம் ஆண்டு வெளிவந்தது. இது மாயாவின் நான்காவது சுயசரிதை தொகுப்பாகும். இதற்கு முன்பு வெளிவந்த மூன்று சுயசரிதை தொகுப்புகள் மற்றும் மூன்று கவிதைத் தொகுப்புகளின் மூலம் 1981 ஆண்டுளில் புகழ்பெற்றிருந்தார். 1978 ஆம் ஆண்டில் வெளிவந்த இன்னும் நான் உயர்கிறேன் என்ற தனது மூன்றாவது கவிதைத் தொகுப்பின் மூலம் தான் ஒரு எழுத்தாளர் என்பதனை உறுதிச் செய்து கொண்டார். 1971 ஆம் ஆண்டில் வெளிவந்த என்க்கு ஒரு குளிர்பான்ம் கொடுங்கள் என்ற மாயாவின் முதல் கவிதை தொகுப்பு சிறந்த கவிதைக்கான புலிட்சர் பரிசிற்குப் [2] பரிந்துரைக்கப்பட்டது

மேற்கோள்கள்

[தொகு]
  1. Minzesheimer, Bob (26 March 2008). "Maya Angelou celebrates her 80 years of pain and joy". USA Today. Retrieved 11 January 2014.
  2. 2.0 2.1 Lupton (1998), p. 118.
  3. Lupton (1998), p. 117.
  4. Lupton (1998), p. 119.