ஒளப்பமண்ணா மனக்கல் சுப்பிரமணியன் நம்பூதிரிப்பாடு ( ஆங்கிலம்: Olappamanna manakkal Subramanian Namboothirippad ) (1923-2000), அவரது குடும்பப் பெயரான ஒளப்பமண்ணா என்ற பெயரால் நன்கு அறியப்படும் இவர் ஒரு மலையாள இலக்கியத்தின் இந்தியக் கவிஞர் ஆவார். கேரள கலாமண்டலத்தின் முன்னாள் தலைவரும், 20 கவிதை புத்தகங்களை எழுதியவருமான இவரது கவிதைகள் வெளிப்படையான சமூக வெளிப்பாடுகளுக்காகக் குறிப்பிடப்பட்டன. இவர் கேரள சாகித்ய அகாதமியிடமிருந்து இரண்டு விருதுகளையும், மற்றொரு விருதை கேந்திரா சாகித்ய அகாதமியிடமிருந்தும் பெற்றுள்ளார். சென்னை அரசின் கவிதை பரிசு, ஓடக்குழல் விருது, என்.வி.புரஸ்காரம், ஆசான் ஸ்மாரக கவிதா புரஸ்காரம், உள்ளூர் விருது போன்ற விருதுகளையும் பெற்றார்.
ஒளப்பமண்ணா சுப்பிரமணியன் நம்பூதிரிப்பாடு 1923 சனவரி 10 இல் தென்னிந்திய மாநிலமான கேரளாவிலுள்ள பாலக்காடு மாவட்டத்தில் வெள்ளிநேழி என்ற ஊரில் கடந்த காலங்களில் கலைஞர்களுக்கும் இசைக்கலைஞர்களுக்கும் ஆதரவளிப்பதில் பெயர் பெற்ற ஒரு வசதியான குடும்பத்தில் ஒளப்பமண்ணா மனை என்ற வீட்டில் [1][2] நீலகண்டன் நம்பூதிரிப்பாடு, தேவசேனா அந்தர்சனம்,[3] ஆகியோருக்கு எட்டு குழந்தைகளில் ஒருவராக பிறந்தார்.[4] சமஸ்கிருதம், வேதங்களின் ஆரம்பகால கல்விக்குப் பின்னர், 1944 ஆம் ஆண்டில் பள்ளிப்படிப்பை முடித்தார். பாலக்காட்டு ஒற்றப்பாலம் பள்ளி, பி.எம்.ஜி உயர்நிலைப்பள்ளி, பாலக்காடு பி.இ.எம் உயர்நிலைப்பள்ளி ஆகியவற்றில் பயின்றார். பின்னர் வரலாற்றில் இளங்கலை படிப்பிற்காக பாலக்காடு அரசு விக்டோரியா கல்லூரியில் சேர்ந்தார். ஆனால் அங்கு படிப்பை முடிக்கவில்லை.[5] பின்னர், அவர் மரம், ரப்பர் தொழில்களில் ஈடுபட்டார். உள்ளூர் அரசியலிலும் ஈடுபட்டார். 1950 முதல் 1964 வரையிலான காலகட்டத்தில், ஈழக்காடு பஞ்சாயத்து, கோட்டோப்படம் ஒன்றியத்திற்குத் தலைமை தாங்கினார்.[6]
ஸ்ரீதேவி என்பவரை மணந்த ஒளப்பமண்ணா, ஏப்ரல் 10, 2000 அன்று, தனது 77 வயதில், மாரடைப்பால் இறந்தார்.[7][8] புகழ்பெற்ற அறிஞரும் கவிஞருமான ஓ. எம். அனுஜன் அவரது சகோதரர் ஆவார்.[9] சிறுவர் இலக்கியத்தின் எழுத்தாளர், சுமனகலா என்று பிரபலமாக அறியப்பட்ட லீலா நம்பூதிரிப்பாடு, சமஸ்கிருத அறிஞர் ஓ.எம்.சி நாராயணன் நம்புதிரிபாத் ஆகியோர் முறையே அவரது மருமகள், மருமகன் ஆவார்கள்.[10][11]
ஒளப்பமண்ணா தனது முதல் கவிதையை 1942 இல் வெளியிட்டார். அவரது கவிதை 21 கவிதை புத்தகங்களை உள்ளடக்கியது [12] இதில் கதகவிதக்கல் மற்றும் நிஜலானா போன்ற விருது வென்ற தலைப்புகள் அடங்கும்.[13] அவரது மூன்று புத்தகங்களான தீதைலம், பாஞ்சாலி, நங்கேமக்குட்டி ஆகியவை காந்த காவ்யங்கள், அம்பா, ஒரு அட்டகாதா ஆகியன. 2009 ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படமான ஓர்க்குக வல்லப்போழும், என்ற படத்தில் லப்பமண்ணாவின் கவிதைகள் இடம் பெற்றுள்ளன. எம். ஜெயச்சந்திரனும் சுஜாதா மோகனும் பாடியுள்ளனர்.[14]
ஒளப்பமண்ணா கேரள கலாமண்டலத்துடன் தொடர்புடையவர். அதன் துணைத் தலைவர் பதவியை வகித்தார். பின்னர் 1978–84 காலப்பகுதியில் அந்நிறுவனத்தின் தலைவராக இருந்தார்.[12] அவர் யோகாசேம சபை, புரோகமனா சாகித்ய சமாதானா ஆகியவற்றுடன் சிறிது காலம் தொடர்பு கொண்டிருந்தார்.[8] மேலும் 1965 முதல் 1974 வரை எழுத்தாளர்களின் கூட்டுறவு சாகித்ய பிரவர்தக சாகரண சங்கத்தின் இயக்குநர் குழுவில் இடம் பெற்றார். புது தில்லி இந்திய கலாச்சார உறவுகளுக்கான அமைப்பில் 1979 முதல் 1984 வரை இருந்தார்.[5]
ஒளப்பமண்ணா 1950 ஆம் ஆண்டில் சென்னை அரசின் கவிதை பரிசை ஆசாரெரிக்கள் என்ற படைப்புக்காக பெற்றார்.[5] கேரள சாகித்ய அகாதமி 1967 ஆம் ஆண்டில் கவிதைக்கான வருடாந்திர விருதுக்காக கதகவிதக்கல் என்ற அவரது கவிதைத் தொகுப்பைத் தேர்ந்தெடுத்தது.[15] மேலும் அவர் 1988 ஆம் ஆண்டில் ஓடக்குழல் விருதைப் பெற்றார். அவரது புத்தகம் நிழலான அவருக்கு இவ்விருதைப் பெற்றுத் தந்தது.[16] இந்த புத்தகம் ஒரு வருடம் கழித்து 1989 இல் கேந்திர சாகித்ய அகாடமி விருது பெற்றுத் தந்தது.[17] 1992 இல் என்.வி.புரஸ்காரம் பெற்ற ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு,[8] கேரள சாகித்ய அகாதமி 1998 இல் ஒட்டுமொத்த பங்களிப்புகளுக்கான கேரள சாகித்ய அகாதமி விருதை மீண்டும் கௌரவித்தது.[18] அதே ஆண்டில் அவர் ஆசான் ஸ்மாரக கவிதா புரஸ்காரத்தைப் பெற்றார்.[19] அவர் உள்ளூர் விருதையும் பெற்றவர் ஆவார்.[3]
{{cite web}}
: CS1 maint: numeric names: authors list (link)
{{cite web}}
: Unknown parameter |=
ignored (help)