ஒஸ்டின் பெர்னாண்டோ Austin Fernando | |
---|---|
கிழக்கு மாகாணத்தின் 2வது ஆளுநர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 27 சனவரி 2015 | |
முன்னையவர் | மொகான் விஜேவிக்கிரம |
தனிப்பட்ட விவரங்கள் | |
முன்னாள் கல்லூரி | பேராதனைப் பல்கலைக்கழகம் |
தொழில் | குடிமை அதிகாரி |
இனம் | சிங்களவர் |
கலுப்பகே ஒஸ்டின் பெர்னாண்டோ (Kalupage Austin Fernando) இலங்கை அரசு அதிகாரியும், கிழக்கு மாகாணத்தின் ஆளுநரும் ஆவார்.
பெர்னாண்டோ தென்னிலங்கையில் காலி ரிச்மண்ட் கல்லூரியில் கல்வி கற்றார்.[1] பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து இளங்கலைப் பட்டம் பெற்றார்.[2] பின்னர் சிறீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் வணிக மேலாண்மையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[2]
பெர்னாண்டோ 1963 ஆம் ஆண்டில் நாகொடை ரோயல் தேசியக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். பின்னர் 1967 இல் இலங்கை நிருவாக சேவையில் சேர்ந்தார்.[2][3] மட்டக்களப்பு, மாத்தளை மாவட்டங்களில் உதவி தேர்தல் ஆணையாளராகவும், பொலன்னறுவை, நுவரெலியா மாவட்டங்களில் அரச அதிபராகவும் பணியாற்றினார்.[2] பின்னர் அவர் கூட்டுறவு ஆணையாளர், பதிவாளர் நாயகம், புனருத்தாரண அமைச்சின் செயலாளர், அஞ்சல்மா அதிபர், இரத்தினக்கல் கூட்டுத்தாபனத் தலைவர், உள்ளூராட்சி மாகாணசபை அலுவல்கள் அமைச்சு, உள்நாட்டலுவல்கள் அமைச்சு, அமைச்சுகளின் செயலாளர் போன்ற முக்கிய பொறுப்புகளை வகித்தார்.[2] ஐக்கிய நாடுகள் அவையின் ஆலோசகராகப் பணியாற்றிய பின்னர் 2001 டிசம்பரில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.[2]
2015 ஆம் ஆண்டு சனவரியில் தெரிவான புதிய அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன பெர்னாண்டோவை சனாதிபதி ஆலோசகராக 2015 சனவரி 15 இல் நியமித்தார்.[4][5] 2015 சனவரி 27 அன்று கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.[6][7]
ஒஸ்டின் பெர்னாண்டோ My Belly is White: Reminiscences of a Peacetime Secretary of Defence என்ற நூலை எழுதியுள்ளார்.[8][9]