ஒஸ்மா பெருங்கோவில் Cathedral of Burgo de Osma | |
---|---|
ஒஸ்மா பெருங்கோவில் (Cathedral of Burgo de Osma) | |
அடிப்படைத் தகவல்கள் | |
புவியியல் ஆள்கூறுகள் | 41°35′08″N 3°04′16″W / 41.585629°N 3.071°W |
சமயம் | கத்தோலிக்கம் |
மண்டலம் | கஸ்டிலே லியோன் |
மாகாணம் | சோரியா மாகாணம் |
ஆட்சிநிலம் | Roman Catholic Diocese of Osma-Soria |
செயற்பாட்டு நிலை | செயற்பாட்டிலுள்ளது |
ஒஸ்மா பெருங்கோவில் (Burgo de Osma Cathedral) என்பது மத்திய எசுப்பானியாவின், எல் பேர்கோ டி ஒஸ்மாவினில் (El Burgo de Osma) அமைந்துள்ள கோதிக் கட்டிடக்கலை அம்சத்துடன் கூடிய பெருங்கோவில் ஆகும். எசுப்பானியாவின் பாதுகாக்கப்பட்ட இடைக்காலக் கட்டிடங்களில் இதுவும் ஒன்றாகும்.[1] அத்துடன் 13 ஆம் நூற்றாண்டின் கோதிக் கட்டிடங்களுக்கு நல்லதோர் உதாரணமாக இதைக் கருதுகின்றனர்.[2] இதன் கட்டுமானப் பணிகள் 1232 ஆண்டு ஆரம்பித்து 1784 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டுள்ளன. இதன் கன்னிமடம் 1512 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அத்துடன் கோபுரம் 1739 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.[3] இது புனித மரியாளுக்குரித்தான பேராலயம் ஆகும்.
இங்கு சமய ஓவியங்கள் பல காணப்படுகின்றன.