ஓ. மாதவன் | |
---|---|
பிறப்பு | ஓ. மாதவன் 1922 சுன்னக்கறா, திருவிதாங்கூர் இராச்சியம், பிரித்தானிய இந்தியா ( தற்போதைய ஆலப்புழா, கேரளம், இந்தியா) |
இறப்பு | 19 ஆகத்து 2005 கொல்லம், கேரளம், இந்தியா | (அகவை 82–83)
தேசியம் | இந்தியர் |
பணி | நடிகர் |
அரசியல் கட்சி | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி |
வாழ்க்கைத் துணை | விஜயகுமாரி |
பிள்ளைகள் | நடிகர் முகேஷ் உட்பட மூவர் |
விருதுகள் | சிறந்த நடிகருக்கான கேரள மாநில திரைப்பட விருது, சயனம் (2000) |
ஓ. மாதவன் ( O. Madhavan ) (1922 - 19 ஆகஸ்ட் 2005) ஓர் இந்திய நாடக இயக்குனரும் மற்றும் நடிகரும் ஆவார். [1] கேரளாவில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவரான இவர் நாடகத்தின் சிறந்த நிபுணர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். கேரளாவில் நாடகத்துறையின் பரிணாம வளர்ச்சிக்கு இவர் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளார். காளிதாச கலாகேந்திரம் என்ற புகழ்பெற்ற நாடக நிறுவனத்தை நிறுவியவர். சயனம் படத்தில் நடித்ததற்காக 2000 ஆம் ஆண்டில் சிறந்த நடிகருக்கான கேரள மாநில திரைப்பட விருதைப் பெற்றுள்ளார்.
நடிகை விஜயகுமாரி இவரது மனைவியாவார். இவர்களது மகன் முகேஷ் நடிகராக உள்ளார். மேலும் இவர்களுக்கு சந்தியா மற்றும் ஜெயசிறீ என்ற இரு மகள்களும் உள்ளனர். [2]