ஓ காதல் கண்மணி | |
---|---|
அலுவல்முறை சுவரொட்டி | |
இயக்கம் | மணிரத்னம் |
தயாரிப்பு | மணி ரத்னம் |
கதை | மணி ரத்னம் |
இசை | ஏ. ஆர். ரகுமான் |
நடிப்பு | துல்கர் சல்மான் நித்யா மேனன் |
ஒளிப்பதிவு | பி. சி. ஸ்ரீராம் |
படத்தொகுப்பு | ஏ. சிறீகர் பிரசாத் |
கலையகம் | மெட்ராஸ் டாக்கீஸ் |
விநியோகம் | ஸ்டுடியோ கிரீன் (தமிழ்) ஸ்ரீ வெங்கடேசுவரா கிரியேசன்சு (தெலுங்கு) |
வெளியீடு | 17 ஏப்ரல் 2015 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் தெலுங்கு |
ஓ காதல் கண்மணி அல்லது ஓக்கே கண்மணி,[1] திரைப்பட இயக்குநர் மணிரத்னம் இயக்கி ஏப்ரல் 17, 2015 அன்று வெளியான தமிழ் காதல் திரைப்படம் ஆகும்.[2][3] இதனை அவரது நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்துள்ளது. இதில் முதன்மை வேடங்களில் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மானும், நித்தியா மேனனும் நடித்துள்ளனர்.[4] இத்திரைப்படம் தற்கால இந்தியச் சூழலில் மணமுடிக்காது உடனுறைந்து வாழும் இளைய இணையரைக் குறித்ததாகும்.[5] இத்திரைப்படத்திற்குப் பின்னணி இசையமைத்திருப்பவர் ஏ. ஆர். ரகுமான் ஆவார்.
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)