![]() | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
ஓசுமியம்(VI) அறுபுளோரைடு
| |
வேறு பெயர்கள்
ஓசுமியம் அறுபுளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
13768-38-2 | |
ChemSpider | 109930 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 123327 |
| |
பண்புகள் | |
OsF6 | |
வாய்ப்பாட்டு எடை | 304.22 கி/மோல் |
தோற்றம் | மஞ்சள்நிறப் படிகத் திண்மம்[1] |
அடர்த்தி | 5.09g/mL[2] |
உருகுநிலை | 33.4 °C (92.1 °F; 306.5 K)[1] |
கொதிநிலை | 47.5 °C (117.5 °F; 320.6 K)[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
ஓசுமியம் அறுபுளோரைடு (Osmium hexafluoride) என்பது OsF6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் ஓசுமியம்(VI) புளோரைடு என்றும் அழைக்கப்படுகிறது. ஓசுமியம் மற்றும் புளோரின் அயனிகள் சேர்ந்து உருவாகும் இச்சேர்மம் அறியப்பட்டுள்ள பதினேழு இரட்டை அறுபுளோரைடுகளில் ஒன்றாகும்.
ஓசுமியம் உலோகம் அதிக அளவு தனிமநிலை புளோரின் வாயுவுடன் 300 பாகை செல்சியசு வெப்பநிலையில் வினைபுரிந்து ஓசுமியம் அறுபுளோரைடு உருவாகுகிறது.
Os + 3 F2 → OsF6
ஓசுமியம் அறுபுளோரைடு மஞ்சள் நிறப் படிகத்திண்மமாக காணப்படுகிறது. 33.4 பாகை செல்சியசு வெப்பநிலை உருகுநிலையும் 47.5 பாகை செல்சியசு வெப்பநிலையை கொதிநிலையும் கொண்டுள்ளது. இச்சேர்மத்தின் கட்டமைப்பு -140 பாகை செல்சியசு வெப்பநிலையில் சாய்சதுர அமைப்பும் Pnma இடக்குழுவும் a = 9.387 Å, b = 8.543 Å, மற்றும் c = 4.944 Å என்ற அணிக்கோவை அளபுருக்களும் கொண்டுள்ளது. ஓர் அலகு கூட்டிற்குள் இருக்கும் நான்கு அனுபவக் குறியீட்டு அலகுகள் (இச்சேர்மத்தில், பிரிநிலை மூலக்கூறுகள்) 5.09 கி.செ.மீ-3 என்ற அடர்த்தியைக் கொடுக்கின்றன[2]
ஓசுமியம் அறுபுளோரைடு மட்டும் எண்முக மூலக்கூற்று வடிவமைப்பைக் (வாயுநிலை அல்லது திரவ நிலைக்கு ஏற்ற முக்கியமான வடிவம்) கொண்டுள்ளது. இவ்வமைப்பில் (Oh) இடக்குழுவும், Os–F பிணைப்பு நீளம் 1.827 Å ஆகவும் இருக்கிறது.[2]
ஓசுமியம் அறுபுளோரைடை பகுதியான நீராற்பகுப்பிற்கு உட்படுத்தினால் OsOF4.சேர்மத்தை உற்பத்தி செய்கிறது.[3]