![]() | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | ஓட்டிசு டெலொய் கிப்சன் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 6 அடி 2 அங் (1.88 m) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலதுகை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலதுகை விரைவு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 210) | சூன் 22 1995 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | சனவரி 6 1999 எ. தென்னாபிரிக்கா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 73) | மே 28 1995 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | மே 3 1997 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: [1], பிப்ரவரி 15 2009 |
ஓட்டிசு டெலொய் கிப்சன் (Ottis Delroy Gibson), பிறப்பு: மார்ச்சு 16, 1969),முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட வீரர் மற்றும் பயிற்சியாளரான இவர் மேற்கிந்தியத் தீவுகள் பார்படோசு, சென்ட்பீட்டர்ஸ்சைப் பிறப்பிடமாகக் கொண்டவர். மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வலதுகை விரைவு பந்து வீச்சுசாளரான இவர் 2 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிளும்,15 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 212 பட்டியல் அ போட்டிகளிலும் மற்ற்றும் 177 முதல்தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் 2010-2014 ஆம் ஆண்டு வரை மேற்கிந்துயத் தீவுகளின் தலைமைப்பயுஇற்சியாளராக இருந்தார்.[2] இதற்கு முன்பாக இவர் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணியின் பயிற்சியாளராக 2007 முதல் 2010 ஆம் ஆண்டு வரையிலும் பின்பு 2015 முதல் 2017 ஆம் ஆண்டு வரை இருந்தார்.[3][4] 2017 முதல் 2019 ஆம் ஆண்டு வரை வரை இவர் தென்னாப்பிரிக்கத் துடுப்ப்பாட்ட அணியின் பயிற்சியாளராக இருந்துள்ளார்.
1995 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது .இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் பந்துவீச்சில் 81 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து அலெக் இசுட்டுவர்ட் மற்றும் டேரன் கா ஆகியோரது இலக்கினைக் கைப்பற்றினார். மட்டையாட்டத்தில் 29 ஓட்டங்களை எடுத்தார். ஆனால் இரண்டாவது ஆட்டப்பகுதியில் அவர் 51 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார் . ஆனால் இலக்கினைக் கைபற்றவில்லை.மட்டையாட்டத்தில் 14 ஓட்டங்களை எடுத்தார். அந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 71 ஓட்டங்களில் அனைத்து இலக்குகளையும் இழந்தது.[5]
1999 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் முத; ஆட்டப் பகுதியில் 91 ஓட்டங்களை விடுக் கொடுத்து ஜேக்கஸ் காலிசு இலக்கினை வீழ்த்தினார். இரண்டாவது ஆட்டப் பகுதியில் 51 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார் . ஆனால் இலக்கினைக் கைபற்றவில்லை.மட்டையாட்டத்தில் 31 ஓட்டங்களை எடுத்தார். இதுவே தேர்வுத் துடுப்பாட்டத்தில் இவரின் சிறந்த மட்டையாட்டம் ஆகும். இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 149 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.[6]
இவர் சிறந்த ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட வீரராக அறியப்படுகிறார். மத்திய ஓவர்களில் இவர் சிறப்பாக ஓட்டங்களைச் சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவினார்.[7] இதுவரை 15 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 141 ஓட்டங்களை எடுத்துள்ளார். ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் 52 ஓட்டங்கள் எடுத்ததே இவரின் அதிகபட்ச ஓட்டமாகும். பந்துவீச்சில் 34 இலக்குகளைக் கைப்பற்றியுள்ள இவரின் பந்து வீச்சு சராசரி 18.26 ஆகுயாளரக ம். இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 42 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து ஐந்து இலக்குகளைக் கைப்பற்றியதே இவரின் சிறந்த பந்துவீச்சு ஆகுமபயிற்சியாளராக
செப்டம்பர் 20, 2007 இல் இவர் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். ஏனேனில் அதற்கு முன்பாக பந்துவீச்சுப் பயிற்சியாளராக இருந்த ஆலன் டொனால்டு தென்னாப்பிரிக்காவில் வர்ணனையாளராகச் சென்றார்.[8] எனவே இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடருக்கு இவர் பந்து வீச்சுப் பயிற்சியாளரானார். அதற்கு முன்பாக இவர் பீட்டர் மூர்ச் எனும் அகாதமியில் பணியாற்றினார்.[9]