ஓட்டேரி நீரோடை (ஆங்கில மொழி: Otteri Nullah) என்பது வடசென்னையுள் ஓடும் கிழக்கு-மேற்கு நீரோடையாகும். இது முள்ளம் கிராமத்தில் தொடங்கி புரசைவாக்கம் வழியாகச் சென்று, பேசின் பாலத்திலுள்ள பக்கிங்காம் கால்வாயில் சேருமுன் பக்கிங்காம் மற்றும் கர்நாடக மில்சை கடக்கிறது.
12 கிலோ மீட்டர் நீளமுடைய இந்த நீரோடை 38.40 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக்கொண்ட நீர்ப்பிடிப்பு பகுதியைக் கொண்டுள்ளது. இது வடசென்னையின் முக்கிய மழைநீர் வடிகாலாகும்.
விக்கித் திட்டம் சென்னையின் அங்கமான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |