ஓமேம் மோயோங் தியோரி | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை | |
பதவியில் 1984-1990 | |
தொகுதி | அருணாச்சல பிரதேசம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 2 சூலை 1943 |
இறப்பு | 10 திசம்பர் 2007 |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | டி. எஸ். தியோரி |
பிள்ளைகள் | 2 மகள்கள் 3 மகன்கள் |
ஒமேம் மோயோங் தியோரி (Omem Moyong Deori)(2 சூலை 1943 - 19 திசம்பர் 2007) என்பவர் இந்தியத் தேசிய காங்கிரசைச் சேர்ந்த அருணாச்சல பிரதேச அரசியல்வாதி ஆவார்.
ஒமேம் மோயோங் தியோரி சூலை 2, 1943-ல் அருணாச்சல பிரதேசத்தின் கிழக்கு சியாங் மாவட்டத்தில் உள்ள பாசிகாட்டில் பிறந்தார். இவருடைய தந்தை குட்டிக் மோயோங்க். சில்லாங்கில் உள்ள தூய மரியா கல்லூரியில் இளங்கலை கலை கல்வி பயின்றார்.[1]
இவர் பல ஆண்டுகளாகச் செல்வாக்கு மிக்க அகில இந்தியக் காங்கிரசு குழுவில் உறுப்பினராக இருந்தார். இந்தியத் தேசிய காங்கிரசின் மிகவும் சக்திவாய்ந்த வடகிழக்கு தலைவர்களில் ஒருவராகக் கருதப்படும் இவர், அருணாச்சல பிரதேச மாநில காங்கிரசு கட்சியின் தலைவராக பணியாற்றினார். தியோரி இந்திரா காந்தியுடன் மிக நெருங்கிய நட்பு வைத்திருந்ததாக நம்பப்பட்டது.
1984 மே 27 முதல் 1990 மார்ச் 19 வரை அருணாச்சலப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1984ஆம் ஆண்டில், சமூக சேவைக்கான பத்மசிறீ விருது ஒமேம் தியோரிக்கு வழங்கப்பட்டது.
டி. எஸ். தியோரியை மணந்த இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் மூன்று மகன்கள் இருந்தனர்.[2]
தியோரி 19 டிசம்பர் 2007 அன்று உடல்நலக்குறைவு காரணமாக இறந்தார். இவரது மறைவை நினைவுகூரும் வகையில் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் துக்க விடுமுறை அறிவிக்கப்பட்டது.