ஓம் பிரகாசு வர்மா (O. P. Verma)(20 மார்ச் 1937 - 8 டிசம்பர் 2015) என்பவர் இந்திய நிர்வாகி ஆவார். இவர் பஞ்சாபின் ஆளுநராகவும் (2003-04), அரியானா ஆளுநராகவும் (சூலை 2004-ல்), கேரள உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மற்றும் இமாச்சல பிரதேச மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். வர்மா உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள கர்முக்தேஷ்வர் மாவட்டத்தில் பிறந்தார். பஞ்சாபின் ஆளுநராகப் பதவியேற்பதற்கு முன், இமாச்சலப் பிரதேசத்தின் மக்கள் நீதிமன்றத் தலைவராகவும் இருந்துள்ளார்.[1][2][3]
இவர் தில்லி பல்கலைக்கழகத்தின் சட்ட பள்ளியில் சட்டக் கல்வி கற்றுள்ளார்..