ஓம் பிரகாஷ் கோலி குசராத்து ஆளுநரும்[1] முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும் ஆவார். 1999-2000 காலகட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தில்லி மாநிலத் தலைவராக இருந்துள்ளார். 1994 முதல் 2000 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ளார். எழுத்தாளரான கோலி இந்தியில் மூன்று நூல்களை வெளியிட்டுள்ளார்: இராஷ்டிரிய சுரக்சா கே மோர்ச்சே பர், சிக்சா நிதி, பக்திகல் கே சந்தோன் கி சமாஜிக் சேத்னா ஆகியவை.[2]