ஓம்ப்ரானா | |
---|---|
நானோரானா மெடாக்ஜென்சிசு | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | ஓம்ப்ரானா துபாயிசு, 1992
|
வேறு பெயர்கள் | |
|
ஓம்ப்ரானா (Ombrana) என்பது டைகுரோகுளோசிடே குடும்பத்தில் உள்ள தவளைப் பேரினமாகும். இது ஓம்ப்ரானா சிக்கிமென்சிசு என்ற ஒற்றை சிற்றினத்தைக் கொண்டுள்ளது. இந்த பேரினத்தின் செல்லுபடியாகும் தன்மை தற்போது நிச்சயமற்றதாக கருதப்படுகிறது.[2]
ஒம்ப்ரானா சிக்கிமென்சிசு மத்திய மற்றும் கிழக்கு நேபாளத்திலும் வடகிழக்கு இந்தியாவின் சில பகுதிகளிலும் (சிக்கிம், மேற்கு வங்காளம் மற்றும் மேகாலயா) காணப்படுகிறது. பூட்டானிலும் சில இடங்களில் இது காணப்படலாம்.[3] இந்த தவளைப் பேரினம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,000 மற்றும் 2,000 m (3,300 மற்றும் 6,600 அடி) வரை உயரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.[1]