ஓவியா | |
---|---|
பிறப்பு | ஹெலென் நெல்சன்[1] ஏப்ரல் 29, 1991 திருச்சூர், கேரளம், இந்தியா |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2008 - தற்போது |
ஓவியா (Oviya, பிறப்பு: ஏப்ரல் 29, 1991, ஹெலன் நெல்சன்) இந்திய வடிவழகியும், நடிகையும் ஆவார். இவர் 2010ல் ஓவியா என்ற பெயர் மாற்றத்துடன் களவாணி திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரை உலகி்ல் அறிமுகமானார்.[2] இவர் 2017ல் விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் தமிழ் 1 என்னும் மெய்நிலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
1991 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி கேரளாவில் உள்ள திரிச்சூரில் பிறந்தார், தற்போது சென்னையில் வசித்து வருகிறார். நடுத்தர குடும்பத்தில் பிறந்து செல்லமாக வளர்க்கப்பட்ட ஓவியா, அரசு பள்ளியில் தனது பள்ளி பருவத்தை முடித்த இவர் பின்பு, திரிச்சூர் விமலா கல்லூரியில் தனது பட்டப்படிப்பினை முடித்தார்.
இந்திய வடிவழகியும் நடிகையுமான இவர் தமிழில் களவாணி படத்தின் மூலம் அறிமுகம் ஆனாலும் கங்காரு (2007) என்ற மலையாள படம் தான் ஓவியாவின் முதல் படம் ஆகும். வெற்றி படமான களவாணியில் நடித்த ஓவியா பின்பு நல்ல கதைகளை தேர்வு செய்து, மெரினா, மூடர் கூடம், யாமிருக்க பயமே போன்ற படங்களில் நடித்தார்.
ஆண்டு | படம் | கதாப்பாத்திரம் | மொழி | குறிப்பு |
---|---|---|---|---|
2007 | கங்காரு | மலையாளம் | ||
2008 | அபூர்வா | பூஜா | மலையாளம் | |
2010 | களவாணி | மகேஸ்வரி | தமிழ் | |
2010 | மன்மதன் அம்பு (திரைப்படம்) | சுனந்தா | தமிழ் | |
2011 | முத்துக்கு முத்தாக (திரைப்படம்) | சுவேதா | தமிழ் | |
கிருத்திகா | நேத்ரா | கன்னடம் | ||
2012 | மெரினா | சொப்னசுந்தரி | தமிழ் | |
கலகலப்பு | மாயா | தமிழ் | ||
2013 | சில்லுனு ஒரு சந்திப்பு | கீதா | தமிழ் | |
மூடர் கூடம் | கற்பகவள்ளி | தமிழ் | ||
மதயானைக் கூட்டம் | ரிது | தமிழ் | ||
2014 | அகராதி | தமிழ் | ||
யாமிருக்க பயமே | சரண்யா | தமிழ் | ||
புலிவால் | மோனிகா | தமிழ் | ||
2015 | சண்டமாருதம் | மின்மினி / ரேகா | தமிழ் | |
ஏ இஷ்க் ஷ்ரபைர | இந்தி | |||
144 | கல்யாணி | தமிழ் | ||
2016 | ஹலோ நான் பேய் பேசுறேன் | ஸ்ரீ தேவி | தமிழ் | |
2017 | சிலுக்குவாருப்பட்டி சிங்கம் | தமிழ் | ||
போகி | தமிழ் | படபிடிப்பில் | ||
இதி நா லவ் ஸ்டோரி | தெலுகு | படபிடிப்பில் | ||
Mr. மொம்மக | கன்னட | படபிடிப்பில் | ||
சீனி | தமிழ் | படபிடிப்பில் | ||