ஔவையார் பலருள் அறநெறிப் பாடல்களைப் பாடிய ஔவையார் 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவரால் பாடப்பட்ட அறநூல்கள்
- ஆத்தி சூடி
- கொன்றை வேந்தன்
- இவை இரண்டும் நூலின் முதலில் தொடங்கும் தொடரால் பெயர் பெற்றவை
- நல்வழி
- மூதுரை
- இவை இரண்டும் நூலில் சொல்லப்படும் பொருளின் தன்மையால் பெயர் பெற்றவை.
- மூதுரை நூலை 'வாக்குண்டாம்' எனவும் வழங்குவர். இது நூலின் முதலில் தொடங்கும் தொடரால் அமைந்த பெயர்
அசதிக் கோவை என்னும் கிடைக்காத நூல் இந்த நூற்றாண்டில் இவரால் பாடப்பட்டது என்பது மு. அருணாசலம் கருத்து.[1][2][3]
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, 2005
- ↑ Dalal, Roshen (18 April 2014). Hinduism: An Alphabetical Guide (in ஆங்கிலம்). Penguin UK. p. 242. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8475-277-9.
- ↑ Ramadevi, B. (3 March 2014). "The saint of the masses". The Hindu. https://www.thehindu.com/features/friday-review/history-and-culture/the-saint-of-the-masses/article5746486.ece.
- ↑ "Biography « The Poet's Magic". Archived from the original on 27 March 2022. பார்க்கப்பட்ட நாள் 30 April 2023.