ககன் முர்மு | |
---|---|
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் சூன் 2024 | |
தொகுதி | மால்டா வடக்கு மக்களவைத் தொகுதி, மேற்கு வங்காளம் |
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 23 மே 2019 – மே 2024 | |
முன்னையவர் | மௌசம் நூர் |
தொகுதி | மால்டா வடக்கு மக்களவைத் தொகுதி, மேற்கு வங்காளம் |
உறுப்பினர், மேற்கு வங்காள சட்டமன்றம் | |
பதவியில் 2001–2019 | |
முன்னையவர் | ஜாது ஹெம்ப்பிரோம் |
பின்னவர் | ஜோயல் முர்மு |
தொகுதி | அபீப்பூர் சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 2 பெப்ரவரி 1960 சேக்பார், மால்டா மாவட்டம், மேற்கு வங்காளம், இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி (2019 - தற்போது வரை) |
பிற அரசியல் தொடர்புகள் | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) (1986 - 2019) |
துணைவர் | மஞ்சு கிஸ்கு |
பிள்ளைகள் | 4 |
வாழிடம் | மொக்தும், மால்டா, மேற்கு வங்காளம் |
முன்னாள் கல்லூரி | மகத் பல்கலைக்கழகம் (இளங்கலை பட்டம்) |
வேலை | சமூக ஆர்வலர் |
கையெழுத்து | |
ககன் முர்மு (Khagen Murmu) (பிறப்பு: 2 பிப்ரவரி 1960), இந்தியாவின் மேற்கு வங்காள மாநில பாரதிய ஜனதா கட்சியின் அரசியல்வாதியும், சமூக ஆர்வலரும் ஆவார். இவர் சந்தாலி பழங்குடியைச் சேர்ந்த பட்டியல் பழங்குடியினர் ஆவார். இவர் 23 மே 2019 அன்று பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மால்டா வடக்கு மக்களவைத் தொகுதியிலிருந்து, நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.[1]
முன்னர் இவர் 2001 ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு முடிய அபீப்பூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) கட்சி சார்பில் மேற்கு வங்காள சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவர்.[2][3][4]