ககன்விகாரி லல்லுபாய் மேத்தா (Gaganvihari Lallubhai Mehta)(1900 – 1974) 1952 முதல் 1958 வரை அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக இருந்தார். இவர் சர் லல்லுபாய் சாமல்தாசின் மகன். இவருக்கு 1959ஆம் ஆண்டு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. இவர் ஆங்கிலேயராக இல்லாததால் ஹூயூஸ்டன் விமான நிலைய உணவகத்தில் உணவருந்த மறுக்கப்பட்டார். இதனால் ஜான் ஃபோஸ்டர் டல்லெசு அமெரிக்கப் பிரிவினை வெளிநாட்டு உறவுகளைப் பாதிக்கிறது என்ற கருத்து தெரிவித்தார்.[1]