ககாங் | |
---|---|
Kahang | |
![]() | |
![]() ககாங் நகரம் | |
![]() | |
ஆள்கூறுகள்: 2°16′N 103°36′E / 2.267°N 103.600°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | ![]() |
பரப்பளவு | |
• மொத்தம் | 548 km2 (212 sq mi) |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 86700[1] |
போக்குவரத்து பதிவெண்கள் | J |
ககாங் (மலாய்: Kahang; ஆங்கிலம்: Kahang; சீனம்: 加亨) என்பது மலேசியா, ஜொகூர், குளுவாங் மாவட்டத்தில், குளுவாங் நகரத்திற்கு மேற்கே அமைந்துள்ள நகரமாகும்.[2]
ஜொகூர் மாநிலத்தில் மட்டும் அல்ல; மலேசியாவில் தனிமைப்படுத்தப்பட்ட நகரங்களில் ககாங் நகரமும் ஒன்றாக அறியப்படுகிறது. எண்டாவ்-ரொம்பின் தேசியப் பூங்காவிற்கு அருகாமையில் உள்ளதால், இந்த நகரம் பொதுவாக எப்போதுமே அமைதியாகவே காணப்படும்.
இந்த நகரம், எண்டாவ்-ரொம்பின் தேசியப் பூங்காவிற்குச் செல்வதற்கு முன், இறுதி நிறுத்தமாக அறியப்படுகிறது. கூட்டரசு சாலை 50 (மலேசியா) (Federal Route 50) என்று அழைக்கப்படும் பத்து பகாட் - குளுவாங் - மெர்சிங் சாலை வழித்தடத்தில் (Jalan Batu Pahat–Kluang–Mersing) அமைந்துள்ளது.[3]
குளுவாங் நகரில் இருந்து 28 மைல் தொலைவில் ககாங் நகரின் மலைப்பகுதியில் ஓர் இயற்கை நெல் பண்ணையும் உள்ளது. சுற்றுலாத் தலமாக மாறிவரும் இந்தப் பண்னையில் இயற்கை உரங்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.
ககாங், சுங்கை பெரோ பழங்குடி கிராமத்தில் வாழும் பழங்குடி மக்கள், தங்களின் அன்றாடப் பயன்பாட்டிற்கு, கிணறுகளில் கிடைக்கும் சுத்தமான நன்னீரை இன்றும் பயன்படுத்தி வருகின்றனர்.[4]
ககாங் நகர்ப்புறத்தில் 1 தமிழ்ப்பள்ளி உள்ளது. அதில் 26 மாணவர்கள் பயில்கிறார்கள். 10 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.
மலேசிய கல்வி அமைச்சு 2022 சூன் மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.[5]
பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
அஞ்சல் குறியீடு | வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|---|---|
ககாங் கல் 24 | SJK(T) Kahang Batu 24[6] | ககாங் கல் 24 தமிழ்ப்பள்ளி | 86700 | ககாங் | 26 | 10 |