கக்கலிபுரம் | |
---|---|
சிற்றூர் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | இராமநகரம் |
வட்டம் | கனகபுரா |
அரசு | |
• நிர்வாகம் | கக்கலிபுரா ஊராட்சி |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 6,907 |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 560082 |
கக்கலிபுரம் (Kaggalipura) என்பது இந்தியாவின் தென் மாநிலமான கர்நாடகத்தின் பெங்களூரின் புறநகரில் கனகபுரா சாலையில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். [1] [2] கக்கலிபுரா பெங்களூர்-கோயம்புத்தூர் தேசிய நெடுஞ்சாலை 948 இல் பெங்களூருக்கு தெற்கே சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. உள்நாட்டில் ஏராளமாக வளரும் கக்காலி மரத்தின் ( செங்கருங்காலி ) பெயரால் இந்த சிற்றூர் அழைக்கப்படுகிறது. இப்பகுதியிலிருந்து பல கக்காலி மரங்களை அழித்து இந்த சிற்றூர் உருவாக்கபட்டது. எனவே கக்கலிபுரா என்று அழைக்கப்படுகிறது.
கக்கலிபுரா பெங்களூரில் உள்ள மெஜஸ்டிக் பேருந்து நிலையத்திலிருந்து 23 கிமீ தொலைவிலும், உத்தரஹள்ளியிலிருந்து 13 கி.மீ. தொலைவிலும், பனசங்கரி கோயிலில் இருந்து 16 கிமீ தொலைவிலும், ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள குளோபல் வில்லேஜ் தொழில்நுட்ப பூங்காவில் இருந்து 17 கிமீ, தொலைவிலும், கெங்கேரியிலிருந்து நைஸ் சாலை வழியாக 18 கிமீ தொலைவிலும், எலக்ட்ரானிக் சிட்டியிலிருந்து 21 கிமீ, தொலைவிலும், மீனாட்சி மாலில் இருந்து 16 கிமீ தொலைவிலும், சிறீ சிறீ ரவிசங்கர் ஆசிரமத்திலிருந்து 1.5 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இந்த சிற்றூரில் இந்துக்கள் மிகப்பெரிய சமயக் குழுவாக உள்ளனர். அவர்களின் கிராம தேவதையாக பட்டாளம்மா தேவி உள்ளார்.
2001[update], ஆண்டைய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ககலிபுராவின் மக்கள் தொகை 6,907 ஆகும். அவர்களில் 3,562 பேர் ஆண்கள், 3,345 பேர் பெண்களாவர்.[1]
காகலிபுரா, பெங்களூரில் பறவை நோக்கலுக்கு ஏற்ற குறிப்பிடத்தக்க ஒரு இடமாகும். இந்த சிற்றூர் பன்னேருகட்டா தேசியப் பூங்காவிற்குள் அமைந்துள்ளது. இதனால் பலவகையான பறவைகளின் இருப்பிடமாக இது உள்ளது.