கங்காமா தொலைக்காட்சி | |
---|---|
தொடக்கம் | 26 செப்டம்பர் 2004[1] |
உரிமையாளர் |
|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் இந்தி தெலுங்கு |
ஒலிபரப்பப்படும் பகுதி | இந்தியா வங்காளம் நேபால் |
தலைமையகம் | மும்பை, இந்தியா |
சகோதர ஊடகங்கள் | விஜய் தொலைக்காட்சி ஸ்டார் பிளஸ் ஸ்டார் ஜல்சா ஸ்டார் மா ஸ்டார் சுவர்ணா |
கங்காமா தொலைக்காட்சி என்பது டிஸ்னி இந்தியாவின் துணை நிறுவனமான ஸ்டார் இந்தியாவிற்கு சொந்தமான சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு கட்டணத் தொலைக்காட்சி சேவை ஆகும். இந்த அலைவரிசை செப்டம்பர் 26, 2004 ஆம் ஆண்டு முதல் மகாராட்டிரம் மாநிலத்தில் மும்பை நகரை தலைமையிடமாக கொண்டு தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் இயங்கி வருகின்றது.[2] இந்த தொலைக்காட்சியில் முக்கியமாக சப்பானிய மற்றும் இந்திய இயங்குபடத் தொடர்களை ஒளிபரப்பு செய்துவருகின்றது.
யுடிவி மற்றும் ரோனி இசுக்ரூவாலா ஆகிய நிறுவனங்கள் 51% மற்றும் 49% என்ற உரிமையுடன் யுனைடெட் ஹோம் என்டர்டெயின்மென்ட்டை என்ற நிறுவனத்தை உருவாக்கினர். இந்த நிறுவனம் இந்திய குழந்தைகள் அலைவரிசைகள் தொடங்க உருவாக்கப்பட்டது.[3] பின்னர் ஜூலை 2006 இல் டிஸ்னி இந்தியா யுடிவி மென்பொருள் தொடர்பு நிறுவனத்திடமிருந்து கங்காமா தொலைக்காட்சியின் ஒரு கட்டுப்பாட்டுப் பங்குகளை வாங்கியது,[4] அதே நேரத்தில் யுடிவியின் 14.9% பங்கையும் பெற்றது. 2006 பிற்பகுதியில் டிஸ்னி கங்காமா தொலைக்காட்சியை யுடிவியிலிருந்து முழுவதுமாக வாங்கியது.[5]
இந்த தொலைக்காட்சியில் 'சிஞ்சான்' என்ற அனிமே தொடர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில்மொழிமாற்றம் செய்யப்பட்டு ஜூன் 19, 2006 அன்று ஒளிபரப்பு செய்தது.[6] பின்னர் இந்த தொலைக்காட்சியின் சந்தைப் பங்கில் 60% வரை பெற்றது. நிகழ்ச்சியில் முக்கிய கதாபாத்திரத்தின் நடத்தை மற்றும் பெரியவர்கள் மீதான அணுகுமுறைகள் குறித்து பெற்றோரிடமிருந்து புகார்கள் வந்தன, இவை இரண்டும் குழந்தைகள் மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று. அதன் காரணமாக இந்த நிகழ்ச்சி 2008 இல் இந்திய தொலைக்காட்சியில் இருந்து தடைசெய்யப்பட்டது.[7]