கசாரி என்பது இந்தியாவின் நாட்டுப்புற பாடல் மற்றும் நடன வகையாகும். இது ஒரு இந்துஸ்தானி பாரம்பரிய இசை வகையாகும், இது சாவன் மாதத்தில் ஆங்கில மாதத்தில் ஜூன் பிற்பகுதியில் இருந்து செப்டம்பர் வரையிலான மழைக்காலங்களில் பசுமை வரத்தொடங்குவதை குறிக்கும் வகையிலும் விவசாய வேலைகளை மீண்டும் தொடங்கும் வகையிலும் இந்த வகை பாடல்கள் பாடப்படும்
பெரும்பாலும் கோடை கால வானத்தில் கருநிறப் பருவகால மேகம் தொடங்கும் போது, தன் காதலனுக்காக ஒரு கன்னிபெண்ணின் தனிமை ஏக்கத்தை விவரிக்க இப்பாடல்கள் பயன்படுத்தப்படுகிறது, குறிப்பாக இந்த பாணி பாடல்கள் மழைக்காலத்தில் பாடப்படுகிறது. [1]
பெரும்பாலான கஜ்ரி பாடல்கள் இளம் பெண்களால் பாடப்படுகின்றன. சவானில் ஜுலுவா விளையாடும் போது இந்தப் பாடல்களை பெண்கள் இரண்டு முறைகளாக பாடுகிறார்கள். கஜ்ரி பாடி ஜுலுவா வாசிப்பது "கஜ்ரி விளையாடுதல்" என்று அழைக்கப்படுகிறது. எனவே, கஜ்ரியின் பாடல்கள் சாவான் மாதத்தின் பசுமையையும் , மழை பொழிவின் ஒலியையும், விளையாட்டின் விளையாட்டுத்தனத்தையும், இளமைப் பருவத்தின் உற்சாகத்தையும், கிண்டல் உரையாடலின் ரசனையையும் பிரதிபலிக்கின்றன .
கருமை நிறத்தைக்குறிக்கும் கஜ்ரி என்பது கஜ்ரா அல்லது கோல் என்ற வார்த்தையிலிருந்து உருவானது இந்த வகை இசை அமைப்பு, மேலும் இது அவதி மற்றும் போஜ்புரி பகுதிகளில் பாடப்படுகிறது. [2] [3] [4]
மிர்சாபூரைச் சேர்ந்த கவிஞரும் நாட்டுப்புறக் கலைஞருமான பத்ரிநாராயண் 'பிரேம்தன்' கஜ்ரியின் இசை குறிப்பில் பல பாடல்களை பாடியுள்ளார். (சாந்தி ஜைனா 1992 , ப. 97) பாடகர்களில், போஜ்புரி-மைதிலி பகுதியைச் சேர்ந்த பிரபல பாடகி சாரதா சின்ஹா பாடிய பல கஜ்ரிகள் பிரபலமானவை.