கசோரா விட்டா ,(Hasora vitta ) வெற்று வரிகளுடைய தாவி , [ 2] [ 3] [ 4] எனும் பட்டாம்பூச்சி [ 3] [ 4] தாவிகள் (ஹெஸ்பெரிடே) குடும்பத்தைச் சேர்ந்த பட்டாம்பூச்சியாகும். இது இந்தியாவிலும் தென்கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளிலும் காணப்படுகிறது. [ 5]
இந்தப் பட்டாம்பூச்சியின் இறக்கை அளவானது 45 முதல் 55 மிமீ வரை உள்ளது. இறக்கை அடர் பழுப்பு வண்ணத்தில் காணப்படும். இது பொதுவான வரிகளுடைய தாவிகளை (ஹசோரா குரோமஸ் ) ஒத்திருக்கிறது. ஆனால் பின் இறக்கையின் வெளிப்புறமாக அடிப்பக்கத்தில் பரந்த வெள்ளை பட்டை இதில் காணப்படும். மேலும் இதன் இறக்கைகள் பளபளப்பாக உள்ளன.[ 6] [ 7]
பிற வேறுபாடுகள்:
ஆண் : முன் இறக்கையின் மேற்பகுதியில் ஓர் புள்ளிக் காணப்படும். சில நேரங்களில் ஒன்றுக்குப் பதில் மூன்று புள்ளிகள் இருக்கும். முன் இறக்கையின் மேற்பகுதியில் எந்த பட்டைகளும் இல்லை. [ 6]
பெண் : பெண் பட்டாம்பூச்சியின் இறக்கையில் காணப்படும் புள்ளியானது பெரியதாகவும் கூடுதலாக இரண்டு புள்ளிகளும் காணப்படும். [ 6]
பட்டாம்பூச்சிக்கு இரண்டு துணைச்சிற்றினங்கள் உள்ளன:
இந்தியாவில் தெற்கில் (கனாரா), சிக்கிம் , அசாம் [ 2] மற்றும் மியான்மர் கிழக்கு, தாய்லாந்து , சீனாவின் மேற்கு , மலேசியா , இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் பொதுவான பட்டைத் தாவிகள் காணப்படுகிறது. [ 4] [ 8]
எவன்ஸ் (1932) கருத்தின்படி இவை அரிதானது வகையினைச் சார்ந்தது அல்ல.[ 8]
வின்டர்-பிளைத் (1957) கூற்றின்படி பொதுவானதல்ல எனப் பட்டியலிடப்படுகிறது.[ 6]
இதனுடைய கம்பளிப்பூச்சிகள் டெரிசு இனங்கள், புங்கை இனங்கள், மில்லெட்டிய எக்சுடென்சா, எண்டோசமாரா ரேசிமோசா, மில்லெட்டிய கிளாப்ரா மற்றும் சபதொபசு பெருகினெசு முதலிய தாவரங்களை உணவாக உண்ணுகின்றன. [ 4] [ 9]
↑ வார்ப்புரு:LepIndex Retrieved April 20, 2018.
↑ 2.0 2.1 R.K., Varshney; Smetacek, Peter (2015). A Synoptic Catalogue of the Butterflies of India . New Delhi: Butterfly Research Centre, Bhimtal & Indinov Publishing, New Delhi. p. 26. எண்ணிம ஆவணச் சுட்டி :10.13140/RG.2.1.3966.2164 . பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-929826-4-9 .
↑ 3.0 3.1 TOL web page on genus Hasora பரணிடப்பட்டது 2020-10-14 at the வந்தவழி இயந்திரம்
↑ 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 Markku Savela's website on Lepidoptera - page on genus Hasora .
↑ W. H., Evans (1949). A Catalogue of the Hesperiidae from Europe, Asia, and Australia in the British Museum . London: British Museum (Natural History). Department of Entomology. p. 68.
↑ 6.0 6.1 6.2 6.3 Wynter-Blyth, Mark Alexander (1957). Butterflies of the Indian Region . Bombay, India: Bombay Natural History Society . p. 468. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8170192329 .
↑ Kunte, Krushnamegh (2000). Butterflies of Peninsular India . India, A Lifescape. Hyderabad, India: Universities Press. p. 192. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8173713545 .
↑ 8.0 8.1 8.2 8.3 Evans, W.H. (1932). The Identification of Indian Butterflies (2nd ed.). Mumbai, India: Bombay Natural History Society . p. 315 , ser no I 1.13.
↑ Ravikanthachari Nitin; V.C. Balakrishnan; Paresh V. Churi; S. Kalesh; Satya Prakash; Krushnamegh Kunte (2018-04-10). "Larval host plants of the buterfies of the Western Ghats, India" . Journal of Threatened Taxa 10 (4): 11495–11550. doi :10.11609/jott.3104.10.4.11495-11550 . http://threatenedtaxa.org/index.php/JoTT/article/view/3104/4402 .
அச்சில்
Evans, W.H. (1932). The Identification of Indian Butterflies (2nd ed.). Mumbai, India: Bombay Natural History Society.
Kunte, Krushnamegh (2000). Butterflies of Peninsular India. India, A Lifescape. Hyderabad, India: Universities Press. ISBN 978-8173713545 .
Wynter-Blyth, Mark Alexander (1957). Butterflies of the Indian Region. Bombay, India: Bombay Natural History Society. ISBN 978-8170192329 .
இணையம்
Beccaloni, George; Scoble, Malcolm; Kitching, Ian; Simonsen, Thomas; Robinson, Gaden; Pitkin, Brian; Hine, Adrian; Lyal, Chris. "The Global Lepidoptera Names Index (LepIndex)" . Natural History Museum, London. பார்க்கப்பட்ட நாள் 2016-10-15 .
ப்ரோவர், ஆண்ட்ரூ VZ, (2007). ஹசோரா மூர் 1881. பதிப்பு 21 பிப்ரவரி 2007 (கட்டுமானத்தில் உள்ளது). தி ட்ரீ ஆஃப் லைஃப் வலைத் திட்டத்தில் ஹசோரா இனத்தின் பரணிடப்பட்டது 2012-10-21 at the வந்தவழி இயந்திரம் பக்கம் http://tolweb.org/ .
"Markku Savela's website on Lepidoptera" .