கடம்பத்தூர்
கடம்பத்தூர் | |
---|---|
ஊராட்சி | |
ஆள்கூறுகள்: 13°05′58″N 79°51′42″E / 13.09953°N 79.86158°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவள்ளூர் |
திருவள்ளூர் | திருவள்ளூர் வட்டம் |
Metro | சென்னை |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 11,235 |
மொழி | |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 631203 |
தொலைபேசி இணைப்பு எண் | 044-2765 |
வாகனப் பதிவு | TN-20-xxxx |
பாராளுமன்றத் தொகுதி | திருவள்ளூர் |
கடம்பத்தூர் (Kadambathur) என்பது இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தின் திருவள்ளூர் வட்டத்தில் உள்ள கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் தலைமையிடம் ஆகும். கடம்பத்தூர் ஊராட்சியில் அமைந்த கடம்பத்தூர், சென்னை நகரத்தின் புறநகர் பகுதியாகும். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 11,235 மக்கள் இங்கு வசிக்கின்றனர்.[1]
சில ஆண்டுகளுக்கு முன்னர் விவசாயம் இந்த நகரம் முக்கிய தொழிலாகவே இருந்தது. இப்போது கிட்டத்தட்ட அனைத்து விவசாய நிலங்களும் குடியிருப்பாகவும் தொழிற்சாலைகளாகவும் மாற்றப்படுகின்றன. ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் (கேட்டர்பில்லர்), சென்னை மகிழுந்துத் தொழிற்சாலை (மிட்சுபிஷி), டெல்பி டி.வி.எஸ் மற்றும் ஹுண்டாய் மொபிஸ் இந்தியா ஆகியவை கடம்பத்தூரை சுற்றிலும் உள்ள தொழில் நிறுவனங்களாகும்.கிரீன்பீல்ட் விமான நிலைய விர்வாக்கம் கடம்பத்தூரில் உள்ள பகுதியில் திட்டமிடப் பட்டுள்ளது. கடம்பத்தூர் நகரம் கடம்பத்தூர், வென்மணபுதூர் மற்றும் கேசவனலத்தூர் ஆகிய மூன்றும் அடங்கிய பகுதிகளாகும். கடம்பத்தூர் தொகுதி இந்தியாவின் தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தின் வருவாய் தொகுதி ஆகும். இதில் மொத்தம் 43 பஞ்சாயத்து கிராமங்கள் உள்ளன.
திருவள்ளூர் மற்றும் அரக்கோணம் இடையேயான இந்த நகரம் சென்னை புறநகர் இருப்பு வழியே கடம்பத்தூர் இரயில் நிலையம் அருகே அமையப்பெற்றுள்ளது. கடம்பத்தூர்நகரம் (வடபழனி) மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்து மூலம் இணைக்கப்பட்டுள்ளது. பேருந்து எண் "538" மற்றும் புறநகர் பேருந்துகள் மூலம் மற்ற பகுதிகளுக்கு இணைக்கப்பட்டுள்ளது.
வசந்தா, பாரதி, பாலாஜி, சுந்தரம், ஸ்ரீனிவாச மற்றும் சதர்ன் டிரான்ஸ்போர்ட் போன்ற தனியார் பேருந்துகள் திருவள்ளூர், காஞ்சிபுரம், ஊத்துக்கோட்டை, பொன்னேரி, உத்திரமேரூர், திருவாளங்காடு மற்றும் மாப்பேடு போன்ற பல்வேறு இடங்களுக்கு இயக்கப்படுகின்றன. கடம்பத்தூரின் முக்கிய போக்குவரத்து புகை வண்டியாகும். இது சென்னை - அரக்கோணம் புறநகர் ரயில் பாதையில் அமைந்துள்ளது. சென்னை சென்ட்ரலுக்கு கிட்டத்தட்ட 45 நிமிடத்தில் பயணம் செய்யலாம். இந்த நகரம் சென்னை சென்ட்ரல், சென்னை கடற்கரை, வேளச்சேரி, ஆவடி, அம்பத்தூர், திருத்தணி, திருப்பதி மற்றும் பெங்களூரு ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.
கடம்பத்தூர், திருவள்ளூர் தாலுக்கா அகரம் கேசவநல்லூர் மற்றும் வென்மாம்பாத்துர் கிராமங்களில் ஏற்கனவே உருவாக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளில் சூழப்பட்ட திருவள்ளூர் - காஞ்சிபுரம் பிரதான மாவட்ட சாலையில் அமைந்துள்ளது.