கடாரம் கொண்டான் | |
---|---|
கடாரம் கொண்டான் திரைப்படத்தின் விளம்பர சுவரொட்டி | |
இயக்கம் | ராஜேஸ் எம்.செல்வா |
தயாரிப்பு | கமல்ஹாசன் ஆர். ரவீந்திரன் |
கதை | ராஜேஸ் எம்.செல்வா |
இசை | ஜிப்ரான் |
நடிப்பு | விக்ரம் அக்சரா ஹாசன் அபிஹசன் |
ஒளிப்பதிவு | ஸ்ரீனிவாஸ் ஆர். குப்தா |
படத்தொகுப்பு | பிரவீன் கே. எல் |
கலையகம் | ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் |
விநியோகம் | டிரிடன் ஆர்ட்ஸ் |
வெளியீடு | ஜூலை 19, 2019 |
ஓட்டம் | 121 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கடாரம் கொண்டான் (Kadaram Kondan) என்பது 2019 ஆம் ஆண்டு வெளிவந்த ஒர் இந்தியத் தமிழ் திரைப்படமாகும். அதிரடி சண்டைப் படமான இதை கமல்ஹாசன் தயாரித்து ராஜேஸ் எம்.செல்வா இயக்கியிருக்கிறார். நடிகர் விக்ரம் கதாநாயகனாகவும் அக்சரா ஹாசன் மற்றும் அபிஹசன் முதலியோர் துணை கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கின்றனர். 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் சனவரி 2019 வரை இத்திரைப்படம் படமாக்கப்பட்டு 2019 ஆம் ஆண்டு சூலை 19 இல் திரையிடப்பட்டது. இத்திரைப்படத்தின் தெலுங்கு மொழி பதிப்பும் இதேநாளில் வெளியிடப்பட்டது. இது 2010 ஆம் ஆண்டு வெளியான பிரெஞ்சு திரைப்படமான பாயிண்ட் பிளாங்கின் அதிகாரப்பூர்வ மறு ஆக்கம் ஆகும். நடிகர் விக்ரமின் நடிப்பு மற்றும் தோற்றம் முதலிய அம்சங்கள் பரவலான பாராட்டைப் பெற்றாலும் இந்தத் திரைப்படம் பார்வையாளர்களிடமிருந்தும் விமர்சகர்களிடமிருந்தும் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
வாசு (அபிஹசன்) மற்றும் ஆதிரா (அக்சரா ஹாசன்) தம்பதிகள் மலேசியாவில் தங்கள் வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள். அவர்கள் தங்கள் குழந்தையை எதிர்பார்த்திருக்கும் நேரத்தில் ஒரு கும்பலால் தேடப்படும் கே.கே (விக்ரம்) இவர்கள் வாழ்க்கையில் நுழைகிறார். காயமடைந்த கே.கே.வை மருத்துவமனையில் இருந்து வெளியே அழைத்து வர அக்கும்பலால் வாசு கட்டாயப்படுத்தப்படுவதாக கதையோட்டம் கட்டமைக்கப்படுகிறது. கே.கே மற்றும் வாசு ஆகியோரை காவல்துறையினரும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். துறைக்குள்ளேயே உளவாளிகளும் இருப்பதை அவர்கள் உணர்கிறார்கள். இத்தகைய இரு திசை வேட்டைக்கு நடுவே கே.கே மற்றும் வாசு அச்சுறுத்தல்களில் இருந்து தப்பித்து ஆதிராவை மீட்பது தான் கதையாகும்.
திரைப்பட தயாரிப்பாளர் சந்திரஹாசன் ஆரம்பத்தில் தனது சகோதரர் கமல்ஹாசன் நடிக்க ராஜேஸ் எம்.செல்வா இயக்க ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் என்ற பதாகையின் கீழ் ஒரு படம் தயாரிக்க விரும்பினார். கமல் நடித்த தூங்கா வனம் திரைப்படம் வெளியான உடனேயே செல்வாவுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. ஆனால் கமல் தனது அரசியல் வாழ்க்கையில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கி விட்டார். எனவே செல்வா விக்ரமை அணுகினார். அவர் அதுவரை இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார், செல்வா அவரிடம் விவரித்த கதையால் ஈர்க்கப்பட்டார். சந்திரஹாசன் பின்னர் இறந்த காரணத்தால் அவரால் திரைப்படத்தை தயாரிக்க முடியவில்லை 2018 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 30 ஆம் நாள் செல்வா இயக்கத்திக் பெயரிடப்படாத ஒரு திரைப்படம் தயாரிக்கப்படுவதாக கமல் அதிகாரப்புர்வமாக தெரிவித்தார். விக்ரம், அக்சரா ஹாசன், அபிஹசன் ஆகியோர் நடிக்கப்போவதாகவும் தெரிவித்தார்[11]. ஒளிப்பதிவை சீறீனிவாசு ஆர் குத்தாவும் படத்தொகுப்பை கே.எல்.பிரவீனும் செய்வதாக இணைந்தனர். டிரைடன் ஆர்ட்சு ஆர். ரவீந்தரன் இணைத்தயாரிப்பாளரக இணைந்து படத்தை தயாரிப்பில் பங்கு கொண்டார் அதேநாளில் படப்பிடிப்பு தொடங்கியது [12]. கமலின் பிறந்தநாளான நவம்பர் 6 ஆம் நாளில் கடாரம் கொண்டான் என்ற திரைப்படப் பெயரும் முதல் பார்வை சுவரொட்டியும் வெளியாகின[13]. மலேசியாவின் கோலாலம்பூரில் படப்பிடிப்பு ஒரு மாதம் நிகழ்ந்தது[13]. நவம்பர் மாத இறுதியில் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்தன[14]. ஒரு பாடல் வரிசை மற்றும் சில ஒட்டு வேலைகள் தவிர பிற முதன்மை படமாக்கல் வேலைகள் 2019 சனவர் 9 இல் நிறைவடைந்தன .[15].
ஜிப்ரான் இத்திரைப்படத்தின் பாடல் உருவாக்கத்தில் பங்கேற்று தூங்காவனம் திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மற்றும் கமல்ஹாசனுடனான கூட்டணியைத் தொடர்ந்தார்[11]. இசை உரிமை மீயூசிக் 247 அமைப்பு பெற்றது.
கடாரம் கொண்டான் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
ஒலிப்பதிவு
| |||||||||
வெளியீடு | 1 மே 2019 (முதல்) 10 சூலை 2019 (இரண்டாவது) 22 சூலை 2019 (மூன்றாவது) | ||||||||
ஒலிப்பதிவு | 2019 | ||||||||
இசைப் பாணி | ஒலிப்பதிவு | ||||||||
நீளம் | 10:59 | ||||||||
மொழி | தமிழ் | ||||||||
இசைத்தட்டு நிறுவனம் | இசை 247 | ||||||||
ஜிப்ரான் காலவரிசை | |||||||||
| |||||||||
|
தமிழ் பாடல்கள்
எண் | பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் | நீளம் (நி:வி) |
1 | கடாரம் கொண்டான் | சுருதி ஹாசன், சபிர் | பிரியன், சபிர் | 03:18 |
2 | தாரமே தாரமே | சித் ஸ்ரீராம் | விவேகா | 03:48 |
3 | தீசுடர் குனியுமா | விக்ரம் | விவேகா | 03:53 |
தெலுங்கு பாடல்கள்
எண் | பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் | நீளம் (நி:வி) |
1 | மிசுட்டர் கே.கே | ஆதித்ய அய்யங்கார், கீதா மாதுரி | இராமயோகயா சாசுத்திரி | 03:18 |
2 | ஒக்க நுவ்வு சாலு | அனுதீப் தேவ் | இராமயோகயா சாசுத்திரி | 03:48 |
3 | விக்ரமகுடா கோ கோ கோ | எல்.வி. ரேவந்த் | இராமயோகயா சாசுத்திரி | 04:10 |
2019 ஆம் ஆண்டு சூலை மாதம் 19 இல் கடாரம் கொண்டான் தமிழ் திரைப்படம் வெளியானது. தெலுங்கில் மிசுட்டர் கே.கே. என்ற மொழிமாற்ற திரைப்படமாக வெளியானது[16]
கடாரம் கொண்டான் திரைப்படத்தின் முதல் மூன்று நாள் வசூல் சென்னை நிலவரப்படி கிட்டத்தட்ட 1.75 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டது. முதல் வாரத்தின் முடிவில் மொத்தமாக 50 கோடி ரூபாய் வசூல் எனவும் தெரிவிக்கப்பட்டது[17]
இப்படத்திற்கு விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்கள் கிடைத்தன.
ராஜேஸ் எம்.செல்வாவின் திரைப்படத் தயாரிப்பானது தொழில்நுட்ப ரீதியாக சில குறைபாடுகளுடன் இருந்தாலும் கடாரம் கொண்டான் படத்தின் அதிரடிக் காட்சிகள் நல்ல பார்வை அனுபவத்தை வழங்குகிறது என டைம்சு ஆப் இந்தியாவின் எம்.சுகந்த் எழுதினார். ஒரு துரத்தல் அல்லது துப்பாக்க்சூடு நடக்கும்போது திரைபடம் போதுமான பரபரப்பை நமக்குத் தருகிறது. ஜிப்ரானின் ஆற்றல்மிக்க இசை படத்தின் வேகத்தை அளிக்கிறது. விக்ரம் நம்மை ஏமாற்றாமல் பார்த்துக் கொள்கிறார். வெடிக்க சிறிது நேரம் எடுக்கும் ஒரு வெடிகுண்டு கதை. ஆனால் அது நிகழும்போது, இது ஒரு நல்ல யூகிக்கும் விளையாட்டு என இந்து பத்திரிகையின் சிறீவத்சன் எழுதினார்.
5 நட்சத்திரப் புள்ளிகளுக்கு 3 புள்ளிகள் வழங்கிய இந்தியா டுடே விமர்சகர் கிருபாகர் புருசோத்தமன் இந்த படத்தை கடாரம் கொண்டான் ஒரு சில வேடிக்கையான சூழ்ச்சிகளையும் மேலதிக வீரத்தையும் கவனிக்கத் தயாராக இருந்தால் ஒரு நல்ல பொழுதுபோக்கு படம் என்றும் எழுதினார்.
அறிவு மற்றும் நேர்த்தியுடன் இதயத்தைத் தடுக்கும் துல்லியத்துடன் எழுச்சியும் வீழ்ச்சியும் மிகுந்த தொடர்ச்சியான தொகுப்புத் துண்டுகள் இரசிகர்களுக்கு வேண்டும். எங்களுக்குக் கிடைத்திருப்பது அலட்சியமாக அரங்கேறிய காட்சிகள். இவற்றை சற்று தொலைதூரமாகவும் துண்டிக்கப்பட்டதாகவும் உணர்கிறோம் என்று பிலிம் காம்பானியன் பரத்வாச்சு எழுதினார்.
திரைபடத்தின் 90 சதவீத காட்சிகள் மலேசியாவில் படமாக்கப்பட்டிருந்தாலும், அது அங்கு வெளியிடப்படவில்லை. மலேசியாவின் திரைப்பட தணிக்கை வாரியத்தின் உத்தரவின் பேரில் படம் அங்கு தடைசெய்யப்பட்டது. முன் அனுமதி பெறாமல் படமாக்கியது, காவல் துறையை தவறாக சித்தரித்திருப்பது போன்றவை அதற்கான காரணங்களாகக் கூறப்பட்டன.