கடின விதை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Lupinus |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/LupinusL. arcticus
|
இருசொற் பெயரீடு | |
Lupinus arcticus S.Wats. |
ஆர்க்டிக் கடின விதை (Lupinus arcticus) பருப்பு (Fabaceae) குடும்பப் பூக்கும் தாவர இனமாகும். இது பொது வழக்கில் ஆர்க்டிக் கடின விதை அல்லது துணை ஆல்பைன் கடினவிதை என வழங்குகிரது. இது வட அமெரிக்கத் தாயகத் தாவரமாகும். இது வட அமெரிக்காவின் வடமேற்குப் பகுதியில் வட ஓரிகான் முதல் அலாசுகா வரையும் கிழக்கில் நுனாவட் வரையிலும் பரவியுள்ளது.[1] பிரித்தானியக் கொலம்பியாவில் நிலவும் பொது காட்டுப் பூவாகும்.[2]
தாவரவியல் பெயர் : லூபின்னசு ஆர்டிக்கசு(Lupinus arcticus)
குடும்பம் : லெகுமினோசுயே (Leguminosae)
லூப்பைன்
இச்செடி பனிக்கட்டி நிறைந்துள்ள (ஆர்க்டிக்) வடமுனைப் பகுதியில் வளர்கிற சிறிய செடி ஆகும். துருவப்பகுதிகளில் உள்ள சிறு விலங்குகள் இதன் விதைகளை உண்ணுகின்றன. இவ்விதையின் உறை மிகக் கடினமானது. உலகில் உள்ள விதைகளில் மிகவும் கெட்டியானதும், கடினமானதும் இவ்விதையே எனக் கருதப்படுகிறது. விதைகள் முளைப்பதற்கு ஓய்வு என்பது அவசியம். சில விதைகள் ஒரு சில நாட்களில் முளைக்கவேண்டும். சில பல மாதங்கள், பல ஆண்டுகள் கழித்து முளைக்கின்றன. விதைகளில் முளைப்பு திறனைப் பொறுத்தவரை லூபின்னசு விதைகள் மிகவும் வியப்பைத் தருகின்றன. கனடாவில் உறைபனியில் இருந்து எடுக்கப்பட்ட விதை முளைத்துள்ளது. இந்த விதையின் வயது 15,000 ஆண்டுகள் ஆகும். 1967 ஆம் ஆண்டு வடமுனைப் பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட விறைத்து போன விதை 48 மணி நேரத்தில் முளைத்துள்ளது. இதன் வயது 10,000 ஆண்டுகள் ஆகும். பனி உருகும்போது சரியான சூழ்நிலைக் கிடைத்தாலும் இவ்விதை உடனே முளைத்துவிடுகிறது. இதில் 300 இனச்செடிகள் உள்ளன.[3][4].[5]
சிறிதும் - பெரியதும், அறிவியல் வெளியீடு, ஜூன் 2001