இனங்காட்டிகள் | |
---|---|
14017-52-8 நீரிலி 15201-56-6 எண்ணீரேற்று | |
ChEBI | CHEBI:37289 |
ChemSpider | 20100833 |
Gmelin Reference
|
12731 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 15335704 |
| |
பண்புகள் | |
Cl3GdO12 | |
வாய்ப்பாட்டு எடை | 455.59 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
கடோலினியம்(III) பெர்குளோரேட்டு (Gadolinium(III) perchlorate) என்பது Gd(ClO4)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு கனிமச் சேர்மம் ஆகும். கடோலினியம்(III) ஆக்சைடுடன் பெர்குளோரிக் அமிலத்தைச் சேர்த்து (70~72%) 80 ° செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியச் செய்தால் கடோலினியம்(III) பெர்குளோரேட்டு உருவாகும்.[1] 1,4-ஈராக்சேனுடன் சேர்ந்து வினையில் ஈடுபட்டு Gd(ClO4)3·9H2O·4C4H8O2 என்ற ஒருங்கிணைவுச் சேர்மத்தைக் கொடுக்கிறது.[2] இனோசிட்டால், சோடியம் அசிட்டேட்டு மற்றும் சோடியம் ஐதராக்சைடு ஆகியவற்றுடன் வினைபுரிந்து ப்ரு மூலக்கூறுக் கொத்துகள் கொண்ட அணைவுச் சேற்மங்களைக் கொடுக்கிறது.[1] குரோமியம்(III) குளோரைடு மற்றும் 2,2'-பைபிரிடைனுடன் சேர்ந்து அமிலக்கார காடித்தன்மை எண் 5.1 என்ற அளவில் வினைபுரிந்து [GdCr(bipy)2(OH)2(H2O)6](ClO4)4·2H2O. என்ற வாய்பாடு கொண்ட அணைவுச்சேர்மத்தைக் கொடுக்கிறது.[3]