கட்டப்பனை (கட்டப்பன) என்னும் சிறு பட்டணம் கேரளத்தில் இடுக்கி மாவட்டத்தில் உள்ளது. மூணார், தேக்கடி ஆகிய முக்கிய ஊர்களுக்கு அருகிலேயே அமைந்துள்ளது.
ஞள்ளானி ஏலம் எனும் உயர்தர ஏலக்காய் வகையை உருவாக்கி உலகப்புகழ் பெற்ற செபாஸ்டியன் ஜோசப் ஞள்ளானி இங்கே வாழ்ந்தவர்.
பிரபல தமிழ், மலையாள எழுத்தாளரும் தமிழ் திரை நடிகருமான ஷாஜி சென் கட்டப்பனையில் பிறந்து வளர்ந்தவர். தமிழிலும் மலையாளத்திலும் அவர் எழுதிய 'சினிமா வெறியின் 40 ஆண்டுகள்' எனும் புத்தகத்தில் திரைப்படம் மற்றும் இசை சார்ந்த கட்டப்பனையில் வரலாற்றைக் குறிப்பிட்டிருக்கிறார்.
இங்கு மிளகு, ஏலக்காய், காபி, கொக்கோ முதலியவற்றை பயிரிடுகின்றனர்.