இறுவாட்சி | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | Fabales
|
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | B. tomentosa
|
இருசொற் பெயரீடு | |
Bauhinia tomentosa L. | |
வேறு பெயர்கள் | |
|
திருவாத்தி, இறுவாட்சி (அறிவியல் பெயர் : Bauhinia tomentosa), (ஆங்கில பெயர் : Yellow Bell Orchid Tree) [2] இது ஒரு பூக்கும் தாவரம் ஆகும். இத்தாவரம் இருபுற வெடிக்கனி இனத்தைச் சேர்ந்த பபேசியே என்ற குடும்ப தாவரம். இத்தாவரம் நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட நுண்ணுயிரியை பெற்றுள்ளது.[3] இந்தியா, சாம்பியா, மொசாம்பிக் மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது.[4][5][6]
இது இரண்டாகப் பிரிந்த இலைகளையும், மஞ்சள் நிறப்பூக்களையும், கரு நிறக் கட்டைகளையும் உடைய மரமாகும். இதன் இலை, மொட்டு, பூ, பிஞ்சு, காய் ஆகிய அனைத்து உறுப்புகளும் மருத்துவப் பயனுடையவை.
திருஆப்பாடி, திருச்சிற்றேமம், திருச்செங்காட்டங்குடி முதலிய சிவன் திருக்கோயில்களில் காட்டாத்தி தலமரமாக உள்ளது.