கட்டுமரக்காரன் | |
---|---|
![]() | |
இயக்கம் | பி. வாசு |
தயாரிப்பு | ஏ. ஜி. சுப்பிரமணியம் |
கதை | பி. வாசு |
இசை | இளையராஜா தேவா (பின்னணி இசை) |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | அசோக் குமார் |
படத்தொகுப்பு | பி. மோகன்ராஜ் |
கலையகம் | ஏ. ஜி. எஸ். மூவிஸ் |
விநியோகம் | ஏ. ஜி. எஸ். மூவிஸ் |
வெளியீடு | 15 சனவரி 1995 |
ஓட்டம் | 150 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கட்டுமரக்காரன் (Kattumarakaran) என்பது 1995 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நாடகத் திரைப்படம் ஆகும். பி. வாசு இயக்கிய இப்படத்தில் பிரபு, புதுமுகம் ஈவா கிரோவர், சங்கவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். திரைப்படப் பாடல்களுக்கு இளையராஜா இசையமைத்தார். படம் 15 சனவரி 1995 அன்று வெளியானது. இப்படம் தெலுங்கில் சாகர் கன்யா என மொழிமாற்றம் செய்யப்பட்டது.[1][2]
முத்தழகு ( பிரபு ) கட்டுமரத்தில் பணிபுரியும் ஒரு மீனவர். அவர் தன் முதலாளியிடம் ( ஆனந்த் ராஜ் ) பணிபுரிகிறார். ஒரு நாள், அவர் வைதேகி ( ஈவா கிரோவர் ) என்ற மர்மப் பெண்ணைக் காப்பாற்றுகிறார்.
இப்படத்தின் பாடல்களுக்கான இசையை இளையராஜா அமைத்தார். 1995 இல் வெளியிடப்பட்ட இசைப்பதிவில், வாலி எழுதிய ஆறு பாடல்கள் உள்ளன.[3] இப்படத்தில் பின்னணி இசையை மட்டும் தேவா அமைத்தார்.
எண் | பாடல் | பாடகர் (கள்) | காலம் |
---|---|---|---|
1 | "அக்கரை இல்ல" | மனோ | 5:12 |
2 | "பனானா பனானா" | மனோ | 4:53 |
3 | "சின்னப் பூவே" | மனோ, சித்ரா | 5:18 |
4 | "கத்தும் கடல்" | மனோ, எஸ். ஜானகி | 5:30 |
5 | "கேக்குதடி" | மனோ, எஸ். ஜானகி | 5:33 |
6 | "வெற்றி வெற்றி" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா | 5:34 |