கணிதத்திக்கான தேசிய அருங்காட்சியகம் (National Meuseum of Mathematics) அமெரிக்காவின்நியூயார்க் நகரத்தில் உள்ள மன்காட்டன் என்னும் இடத்தில் அமைந்துள்ளது.[1][2]. கணிதத்திக்கான தேசிய அருங்காட்சியகம் 2012 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 15 ஆம் நாள் ஆரம்பிக்கப்பட்டது. வட அமெரிக்காவில் கணிதத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரே அருங்காட்சியகம் இதுவாகும்.[3] மேலும், இடைவினைக்கு வாய்ப்புள்ள 30 கணித காட்சிப்பொருள்கள் இங்கு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.[4][5] இந்த அருங்காட்சியகம் கணிதத்தைப் பற்றிய பொதுமக்களின் பார்வையையும், புரிதலையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.[6]
2006 ஆம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாட்டில் நீள் தீவில் கணிதத்திக்காக செயல்பட்டு வந்த ஒரே அருங்காட்சியகம் மூடப்பட்டது.[7] இதைத் தொடர்ந்து இந்த அருங்காட்சியகத்தின் நிறுவனர் கிளென் ஒயிட்னி மற்றும் குழுவினர் ஒரு புதிய அருங்காட்சியகத்தை நிறுவ முயற்சித்தனர். 2009 ஆம் ஆண்டில் நியூயார்க் மாநில கல்வித் துறையிடமிருந்து ஒரு உரிமை ஆவணத்தை அவர்கள் பெற்றனர்.[6] அதன் பின்னர் ஒரு நான்காண்டு காலத்திற்குள் 22 மில்லியன் டாலர்கள் நிதியைத் திரட்டினர்.[8]
இந்த நிதி ஆதாரத்துடன், 19000 சதுர அடி (1800 சதுர மீட்டர்) பரப்புள்ள இடத்தை வட சரித்திர மாவட்ட மடிசன் சவுக்கம் என்ற இடத்தை குத்தகைக்கு எடுத்தனர். உள்ளூர் மக்களால் கட்டுமான வடிவமைப்பிற்கு சில எதிர்ப்புகள் இருந்த போதும்,[9] நியூயார்க் நகர நிலக்குறியீடுகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் கட்டுமானத் துறையினால் அனுமதி வழங்கப்பட்டது.