கணிதக் கருவி (mathematical instrument) என்பது கணித ஆய்விலும் பயன்பாட்டிலும் உதவும் ஒரு கருவியாகும். வடிவவியலில் பல்வேறு நிறுவல்களுக்கான வரைதல்களுக்கு கவராயம் மற்றும் நேர்விளிம்பு பயன்படுத்தப்படுகின்றன. பயன்பாட்டுக் கணிதத்தில் கோணங்களையும் தொலைவுகளையும் அளப்பதற்கு இவை உதவுகின்றன. காலத்தை அளக்கவும், வானியல், கடற்பயண வழிகாட்டுதல், நில அளவியல் போன்ற துறைகளிலும் இவை பங்குபெறுகின்றன.[1]
கோள்கள் மற்றும் பிற விண்பொருட்களின் இருப்பிடத்தையும் நகர்வையும் கணிப்பதற்கு கோள்காண் வட்டு போன்ற கருவிகள் பயன்படுத்தப்பட்டன. அறுபாகைமானி, திசைகாட்டி போன்ற்வை கடலோடுபவர்களின் வழிகாட்டலில் பயன்படுத்தப்பட்டவையாகும்.
பெரும்பாலான கணிதக் கருவிகள் வடிவவியல் பயன்பாடு கொண்டவை. அவற்றுள் அளவுகோல், இடுக்குமானி, பாகைமானி, மூலைமட்டம், கவராயம் போன்றவை அடங்கும். எண்சட்டம், நழுவு சட்டம், கணிப்பான் போன்ற கருவிகள் எண் கணிதத்தில் பயன்படுகின்றன.