கணிதமும் நார்கலைகளும் (Mathematics and fiber arts) என்பது மெழுகு தயாரித்தல், பின்னல், குறுக்குத் தையல், கொக்கி பின்னல், சித்திரத்தையல், மற்றும் நெய்தல் போன்ற நார் கலைகளைப் பயன்படுத்தி கணிதக் கருத்துக்களில் ஆர்வத்தை ஏற்படுத்துதல் ஆகும். கணிதக் கருக்களான கட்டமைப்பியல், வரைபடக் கோட்பாடு, எண் கோட்பாடு மற்றும் இயற்கணிதத்தில் இந்நார்கலை பயன்படுத்தப்படுகின்றன. சித்திரத் தையலின் சில நுட்பங்களுக்கு இயற்கையாக வடிவவியல் உதவுகிறது.[1] மேலும் துணிகளில் இயல்பான வண்ணச்செயல்பாட்டிற்கு கணிதமும், நார்கலையும் உதவுகிறது.[2]