![]() | இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி கணேசு தேவி கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
கணேஷ் வி தெவி | |
---|---|
பிறப்பு | 1950 போர் நகரம் |
படித்த இடங்கள் |
|
பணி | மானிடவியலர், கல்வியாளர், மொழியியலாளர் |
விருதுகள் | சாகித்திய அகாதமி விருது |
கணேஷ் நாராயண் தாஸ் (Ganesh Narayan Das, 1 ஆகஸ்ட் 1950)[1], என்பவர் பரோடாவில் உள்ள சயாஜிராவோ பல்கலைக் கழகத்தின் முன்னாள் பேராசிரியர் ஆவார். புகழ்பெற்ற இலக்கிய விமர்சகர் மற்றும் ஆர்வலராகவும் திகழ்பவர். வதோதாராவில் உள்ள ‘பாஷா ஆராய்ச்சி மற்றும் வெளியீட்டு மையத்தின்’ நிறுவனராகவும் இயக்குனராகவும் உள்ளார்.
இவர் கோலாப்பூரில் உள்ள சிவாஜி பல்கலைக்கழகம், இங்கிலாந்திலுள்ள லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார். பல கல்விப் பணிகளில், அவர் லீட்ஸ் பல்கலைக்கழகத்திலும், யேல் பல்கலைக்கழகத்திலும், ஜவகர்லால் நேரு அறக்கட்டளை (1994-96) மூலம் நிதி பெற்று ஆய்ந்தவர்.
2002 ஆம் ஆண்டு முதல், குஜராத் மாவட்ட காந்திநகரில் உள்ள திருபாய் அம்பானியின் தகவல்தொடர்பு தொழில்நுட்பத்துறையில் பேராசிரியராகப் பணியாற்றினார். அங்கிருந்து விலகி, பரோடா மஹாராஜா சயாஜிராவோ பல்கலைக் கழகத்தில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பரோடாவிலிருந்து உலகின் மொழி வேறுபாட்டின் வரைபடத்தைத் தொடர, கருநாடக மாநிலத்தின் தார்வார்ட்க்குச் சென்றார்.
வதோதராவில் அமைக்கப்பட்ட பாஷா மொழி ஆய்வகம், பழங்குடி சமூகங்களைப் பற்றிய ஆய்வை மேற்கொள்ள குஜராத்தில் மாவட்டத்தில் உள்ள ஆதிவாசி அகாடமி ஆகியவற்றை இவர் ஏற்படுத்தினார். இவை பழங்குடி சமூகங்களைப் பற்றிய ஆய்வுக்கு ஒரு தனித்துவமான கல்வி சூழலை உருவாக்குவதற்கு நிறுவப்பட்டன. 2010 இல் இந்தியாவின் மக்கள் மொழியியல் ஆய்வுக்கு வழிவகுத்தார், இவ்வமைப்பானது தற்காலத்தில் புழங்கும் 780 இந்திய மொழிகளையும் ஆய்வு செய்து ஆவணப்படுத்தியுள்ளது.
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)